துபாய்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, துபாயின் பாம் ஜுமேரா தீவில் 163 மில்லியன் டாலர் மதிப்பிலான (1349.60 கோடி ரூபாய் மதிப்பிலான) ஒரு ஆடம்பர மாளிகையை வாங்கியுள்ளார்.
ஸ்டார் பக்ஸ் மற்றும் H&M மற்றும் விக்டோரியா சீக்ரெட்ஸ் பிராண்டுகளான உள்ளூர் உரிமையாளர்களைக் கொண்ட, வணிகரான குவைத் அதிபர் முகமது அல்ஷாயாவின் குடும்பத்திடமிருந்து அம்பானி கடந்த வாரம் இந்த சொத்தினை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
சொகுசு வீடு
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னனியில் இருந்து வரும் முகேஷ் அம்பானி, தொடர்ந்து அவ்வப்போது இது போன்ற ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான 84 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை வைத்துள்ள முகேஷ் அம்பானி, தனது இளையமகன் ஆனந்துக்காக 80 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு வீட்டினை சமீபத்தில் வாங்கினார்.
என்னென்ன வசதிகள்
ஆனந்த் அம்பானிக்கான வாங்கிய வீடும், தற்போது வாங்கியுள்ள வீட்டில் இருந்து அருகில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில் 10 படுக்கையறைகள், ஒரு ஸ்பா, உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் குளங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒபாம் ஜீரோவில் சமீபத்திய காலமாக உலகின் மிகப்பெரிய பணக்காரர்களும், பிரபலங்களும் இங்கு வீடுகளை வாங்கி வருகின்றனர்.
பாம் ஜுமேரா தீவு
பாம் ஜுமேரா தீவு இயற்கையான தீவு அல்ல. இது கடலில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தீவு ஆகும். நூற்றுக்கணக்கான நட்சத்திர ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை மாளிகைகள் என பலவற்றையும் பாம் ஜூமேரா மிஞ்சிவிடும் என்று கூறப்படுகின்றது.
இந்தியர்களை ஈர்க்கும்
இத்தகைய சொகுசு வசதிகளை கொண்ட இந்த வீட்டினை வாங்கிய பின்னர், அம்பானி குடும்பம் தற்போது மீண்டும் ஒரு வீட்டினை வாங்கியுள்ளது. எனினும் இதில் எந்த மாதிரியான வசதிகள் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் வெளியாகவில்லை.
இந்தியர்களின் விருப்பமான ரியல் எஸ்டேட் தளமாக துபாய் மாறி வருகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மக்கள் தொகையில் 80% வெளி நாட்டு குடியிருப்பாளர் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications