ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, சர்வதேச அளவிலான டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்தியர் ஆவார்.
ஹூருன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, 82 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு முன்னால் இருந்த கெளதம் அதானியினையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையின் காரணமாக 2022 - 2023ல் வாரத்திற்கு 28 பில்லியன் டாலர் அல்லது 3000 கோடி ரூபாய் சொத்துக்களை இழந்த அதானி, இரண்டாவது பெரிய பில்லியனர் ஆக இருந்தவர்.
அம்பானி & அதானி சொத்து மதிப்பு
இரண்டாவர்து இடத்திற்கு தள்ளப்பட்ட கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் 20 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவினைக் கண்டு, 82 பில்லியன் டாலராக இருந்தது.
இந்திய பில்லியனர்கள்
இதே மற்ற இந்திய பில்லியனர்களான சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் சைரஸ் பூனவல்லாவின் சொத்து மதிப்பு, 27 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஷிவ் நாடார் மற்றும் அவரின் குடும்ப சொத்து மதிப்பு 26 பில்லியன் டாலராகும். இதே லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலராகும்.
பில்லியனர்கள் எண்ணிக்கை சரிவு
ஹூருன் பட்டியலில் உள்ள பில்லியனர்கள் 3112 பேராக குறைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டில் 3384 பேராக இருந்தனர். பில்லியனர்கள் எண்ணிக்கையானது 8% சரிவினைக் கண்டும், அவர்களின் சொத்து மதிப்பு 10% சரிவினைக் கண்டும், 1078 பில்லியனர்கள் அவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்தும், இதில் 176 பேர் புதிய பில்லியனர்களும் இணைந்துள்ளனர். 2479 பேரின் சொத்து மதிப்பு சரிந்தும் காணப்படுகிறது.
ஜெப் பெசோஸ் & எலான் மஸ்க்
டாப் பில்லியனர்களில் அமேசானின் தலைவர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 70 பில்லியன் சரிவினைக் கண்டு, 118 பில்லியன் டாலராகவும், டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 48 பில்லியன் டாலர் குறைந்து, 157 பில்லியன் டாலராகவும் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications