இந்தியாவில் டிஜிட்டல் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதேவேளையில் அரசு கட்டமைப்புகளிலும் நிதி பரிமாற்றங்களை ஒருவரின் கணக்கில் கண்காணிக்க பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் மற்றொரு கடன் புரட்சி உருவாகியுள்ளது.
இந்தியாவில் டேட்டா அடிப்படையிலான கடன் வழங்கும் சேவை மிகப்பெரியதாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய நிதியியல் சந்தையில் உலகமே வியக்கும் வகையில் பல முன்னேற்றம் அடைந்து வரும் வேளையில் டேட்டா அடிப்படையிலான கடன் புதிய மாற்றத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் Account Aggregator (AA) framework வாயிலாக தனிநபர் மற்றும் வர்த்தகங்களுக்கு டேட்டா-வை மையமாக கொண்டு கடன் அளிக்கும் சேவை மேம்பட்டு வருகிறது என இன்போசிஸ் சேர்மன் மற்றும் ஆதார் தளத்தை கட்டமைத்த நந்தன் நீலகேனி CIIE கூட்டத்தில் தெரிவித்தார்.
Account Aggregator சேவை
இந்தியாவில் Account Aggregator சேவை தற்போது பல தரப்பினருக்கு கிடைப்பது இல்லை, விரைவில் இது மாறும் பட்சத்தில் கடன் வழங்கும் முறை பெரிய அளவில் மாறுப்படும். இதன் மூலம் பல கோடி மக்கள், வர்த்தகங்களுக்கு Account Aggregator மூலம் டேட்டா-வை மட்டுமே மையமாக கொண்டு கடன் அளிக்க முடியும், இது மட்டும் அல்லாமல் இது பரவலாக்கப்படும் வேளையில் யுபிஐ பேமெண்ட் சேவை எந்தளவுக்கு வேகமாக நடக்கிறதோ, அதே போன்ற வேகத்தில் ஒருவர் கடன் பெற முடியும்.
நிதியியல் சந்தை
இந்திய நிதியியல் சந்தையில் அடுத்த 3-4 வருடத்தில் இதுதான் பெரிய வர்த்தக சேவையாக இருக்க போகிறது எனவும் இன்போசிஸ் சேர்மன் நந்தன் தெரிவித்துள்ளார். Account Aggregator என்பது ஒருவரின் நிதியியல் தரவுகளை டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதற்காக டிஜிட்டல் முறையில் ஆவணங்களை வங்கி மற்றும் நிதியமைப்புகளுக்கு பகிரப்படும் இந்த கட்டமைப்பு தான் அக்கவுன்ட் அக்ரிகேட்டர் ப்ரேம்வொர்க்.
தகவல் பரிமாற்றம்
ஆர்பிஐ தகுதியான அமைப்புகளுக்கு Account Aggregator உரிமம் வழங்குகிறது, இந்த அமைப்பு தான் Financial Information Providers (FIPs) மற்றும் Financial Information Users (FIUs) மத்தியிலான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது. மேலும் இந்த நிதி தகவலை குறிப்பிட்ட தனிநபரின் ஒப்புதல் உடன் தான் அளிக்கப்படும்.
முக்கிய அமைப்பு
RBI, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) ஆகியவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களை பயனர் ஒப்புதலைப் பெற்ற பிறகு கணக்கு ஒருங்கிணைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றன.
10 வருடம்
இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த கட்டமைப்பில் இணைய இன்னும் சில வருடங்கள் ஆகும். இது மட்டும் நடந்துவிட்டால் postpaid economy ஆக இருக்கும் இந்தியா pre-paid economy ஆக அடுத்த 10 வருடத்தில் மாறும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications