விப்ரோவின் அதிரடி முடிவு.. செம குஷியில் ஐடி ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு: கொரோனா பரவல் காரணமாக விப்ரோவின் 98% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் இந்த நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.

ஏனெனில் இது கலாச்சாரத்தை வளர்க்கவும், புதுமைகளை வளர்க்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறைந்த ஊழியர்களே அலுவலகம் வருகின்றனர்

குறைந்த ஊழியர்களே அலுவலகம் வருகின்றனர்

தற்போது விப்ரோவின் 2% குறைவான ஊழியர்களே அலுவலகத்திற்கு வருகிறார்கள். அதாவது மொத்தம் 1.85 லட்சம் ஊழியர்களில் 3000 பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வருகின்றனர். மீதமுள்ளவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். நிறுவனம் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்த நிலைப்பாடு டிசம்பர் மாதம் வரையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 WFH நிரந்தர அம்சமாக மாற்ற முடிவு

WFH நிரந்தர அம்சமாக மாற்ற முடிவு

வாடிக்கையாளர்கள் நம்ப முடியாத அளவுக்கு ஆதரவளித்துள்ளனர். அதேசமயம் அரசும் SEZ பிரிவுகளில் பணியாற்ற வேண்டிய விதிகள் மற்றும் தளர்வு அளிப்பதிலும், அரசு நம்ப முடியாத அளவுக்கு ஆதரவளித்துள்ளது. இதற்கிடையில் இதனை எப்படி நிரந்தர அம்சமாக மாற்றுவது என்பது குறித்து, அரசுடன் அதிகளவில் உரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் ரிஷாத் தெரிவித்துள்ளார்.

ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்

ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்

அதோடு பழையபடி நாங்கள் நூறு சதவீதத்திற்கு ஒரு போதும் திரும்ப செல்ல மாட்டோம். எனினும் அவர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும். ஆனால் சமமாக அனைவரும் வர வேண்டும். எனவே வீட்டில் இருந்து அனைவரும் வேலை செய்ய மாட்டார்கள். அதே நேரம் வீட்டில் இருந்து அனைத்து மக்களும் சிறிது காலம் வேலை செய்வார்கள் என்றும் ரிஷாத் தெரிவித்துள்ளார்.

அலுவலகம் வந்து செல்ல வேண்டும்

அலுவலகம் வந்து செல்ல வேண்டும்

மேலும் கலாச்சாரம் மற்றும் புதுமை உள்ளிட்ட இரண்டு காரணங்களுக்கான ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பி வந்து செல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் ரிஷாத் பிரேம்ஜி கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக நான் தனிப்பட்ட முறையில் நிறைய நேரத்தினை செலவிடுகிறேன். ஆனால் உண்மை என்னவெனில் மக்கள் கூடும்போது தான் காலச்சாரம் மேம்படுகிறது. அதாவது அவர்கள் காஃபி அருந்தும் போதும், வாட்டர் கூலர் செல்லும் போது கிசு கிசுக்கும் குறிப்புகளை பரிமாறிக் கொள்ளும் போதும் தான் வளர்ச்சி மேம்படுகிறது.

எதுவும் தீர்மானிக்கப்படவில்லை

எதுவும் தீர்மானிக்கப்படவில்லை

இந்த நிலையில் விப்ரோ அலுவலகத்தில் இருந்து எத்தனை பேர் பணியாற்றுவர். வீட்டில் இருந்து எத்தனை பேர் பணியாற்றுவர் என தீர்மானிக்கப்படவில்லை. எனக்கும் அது தெரியவில்லை. ஒரு வேலை 60 - 80% பேர் அந்த வரம்பில் செல்லலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் 75% பேர் வீட்டில் இருந்தே பணிபுரிவார்கள். எனினும் அவர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிய மாட்டார்கள். அவர்களும் சில காலம் அலுவலகம் வர வேண்டி இருக்கும் என்றும் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

மற்ற நிறுவனங்களில் எப்படி?

மற்ற நிறுவனங்களில் எப்படி?

ஜூன் 30வுடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களில் 95% மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் டிசம்பர் 31 வரை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியவே ஊக்கப்படுத்தினர். இதனை ஐடி நிறுவனங்களின் தலைவர்களும் வரவேற்றனர். ஆக இதனால் நிறுவனங்கள் இந்த ஆண்டின் இறுதி வரையில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rishad Premji said employees want to come back and WFH for key reasons

Rishad Premji said employees want to come back and WFH for key reasons
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X