விப்ரோ நிறுவனம் சுமார் 300 ஊழியர்கள் தனது சக போட்டி நிறுவனங்களுக்கு விப்ரோ-வில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே வேலை செய்ததைக் கண்டுப்பிடித்த நிலையில் பணிநீக்கம் செய்தது
இப்படி, ஒரு நிறுவனத்தில் இருந்துக்கொண்டு மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது சீட்டிங் வேலை என விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் ப்ரேம்ஜி ஏற்கனவே தெரிவித்த நிலையில் தற்போது 300 ஊழியர்கள் பணிநீக்கம் தனது ஊழியர்களை எச்சரிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ரிஷாத் ப்ரேம்ஜி செய்வது மட்டும் என்ன என்ற நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Moonlighting பிரச்சனை
ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும்போதே கூடுதல் வருமானத்திற்காக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி மற்றொரு நிறுவனத்திற்குப் பணியாற்றுவது தான் Moonlighting. இது சாமானிய ஊழியர்களுக்குத் தான் பிரச்சனையாக உள்ளது, ஆனால் பெரும் நிறுவனங்களின் உரிமையாளர், அல்லது பெரு பதவிகளில் இருப்பவர்களுக்குப் பிரச்சனையாக இருப்பது இல்லை.
ரிஷாத் ப்ரேம்ஜி
பெரு நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் டிரஸ்ட்களில் உறுப்பினராகப் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக Moonlighting செய்வது சீட்டிங் எனக் கூறும் விப்ரோ சேர்மன் ரிஷாத் ப்ரேம்ஜி ஓரே நிறுவனத்தில் இரண்டு நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
ரிஷாத் ப்ரேம்ஜி பதவிகள்
ரிஷாத் ப்ரேம்ஜி தற்போது விப்ரோ லிமெட்ட நிறுவனத்தின் சேர்மன், அசிம் ப்ரேம்ஜி பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாக உறுப்பினர், விப்ரோ எண்டர்பிரைசர்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர், விப்ரோ GE கூட்டணி நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளில் உள்ளார். இவை அனைத்தும் அவருடைய நிறுவனம் என்பதால் தவறு இல்லை.
நாஸ்காம்
ஆனால் ஏபர்ல் 2018 முதல் ஏப்ரல் 2019 வரையில் நாஸ்காம் அமைப்பின் சேர்மன் ஆக இருந்துள்ளார் ரிஷாத் ப்ரேம்ஜி, இதே காலகட்டத்தில் விப்ரோ லிமிடெட் நிறுவனத்தில் Chief Strategy officer பதவியில் இருந்துள்ளார். இதோடு விப்ரோ நிறுவனத்தின் பிற பதவிகளிலும் இருந்துள்ளார்.
டிவிட்டர் பதிவு
சாமானிய ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு வேறு நிறுவனத்தில் பணியாற்றினால் தவறு அதுவே பெரும் பதவிகளில் இருப்பவர்கள் செய்தால் தவறு இல்லையா.. என்று Nascent Information Technology Employees Senate தனது டிவிட்டரில் கேள்வி கேட்டு உள்ளது.
ஸ்விக்கி நிறுவன கொள்கை
ஆனால் ரிஷாத் ப்ரேம்ஜி நாஸ்காம் தலைவர் பொறுப்பை ஏற்கும்போது விப்ரோ நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெற்ற பின்பு தான் சேர முடியும். ஸ்விக்கி தனது நிறுவன கொள்கையாகவே மூன்லைட்டிங் -ஐ சேர்த்தது போல் விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவை சேர்த்துவிட்டால் இந்தச் சீட்டிங் பிரச்சனை இருக்காது.
பெரும் தலைவர்கள்
ரிஷாத் ப்ரேம்ஜி மட்டும் அல்ல பலர் நிறுவனங்களின் தலைவர்கள் பல நிறுவனத்தின் முக்கியப் பதவிகளில் உள்ளனர். முதலில் பெரும் தலைவர்கள் ஒரு நிறுவனத்தில் மட்டும் பணியாற்றுவதை அதாவது மூன்லைட்டிங் செய்வதை நிறுத்த சொல்லுங்க என மேலும் சிலர் டிவீட் செய்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications