பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் சொத்து மதிப்பு, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 120 மில்லியன் பவுண்டுகளை தாண்டி பிரிட்டன் பணக்காரர்களை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் மிரள வைத்துள்ளது.
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு பிரிட்டன் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பை காட்டிலும் அதிகம் என்பது தான் இந்த வியப்பிற்கு முக்கியமான காரணம். இந்த ஜோடியின் மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் பங்குகள் வாயிலாகக் கொண்டு உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மூலம் மூலம் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி-யின் மொத்த சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது என்று இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட பிராட்காஸ்ட் நெட்வொர்க் iTV தெரிவித்துள்ளது. .
சமீபத்திய சண்டே டைம்ஸ் வருடாந்திர பணக்காரர்களின் பட்டியலில் கூறப்பட்டது போல், அந்நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக UK பில்லியனர்களின் சொத்து மதிப்பின் ஏற்றம் முடிவுக்கு வந்ததாக கருதினர். இந்த நிலையிலும் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு வளர்ந்துள்ளது.
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டின் 529 மில்லியன் பவுண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முடிவில் 651 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. அக்ஷதா மூர்த்தி-க்கு இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்துக் கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது.
ஆனாலும் அக்ஷதா மூர்த்தி-யின் தற்போதைய சொத்து மதிப்பு 2022 இல் அதன் உச்ச அளவான 730 மில்லியன் பவுண்டுகளை எட்டவில்லை என்பது முக்கியமான விஷயமாகும்.
இதேபோல் பிரிட்டன் மன்னர் சார்லஸ்-ன் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 600 மில்லியன் பவுண்டுகளில் இருந்து இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
பிரிட்டன் பில்லியனர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் பெரும் மாற்றம் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சரிவை சந்தித்து வருவது ஒருபக்கம் இருந்தாலும், 2022ல் 177 ஆக இருந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 165 ஆக குறைந்துள்ளது.
பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிவுக்கு பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது, சில தனிநபர்கள் அதிக கடன் வாங்கும் விகிதங்கள் காரணமாக அவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் சரிவு ஏற்பட்டு உள்ளது. பல பில்லியனர்கள் பிரிட்டன் நாட்டை விட்டுவிட்டு வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications