மோடி உடன் மீட்டிங்.. உடனே 'ஓகே' சொன்ன ரிஷி சுனக்.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் நாட்டின் அதிகப்படியான ஊழியர்கள் தட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் வெளிநாடுகளில் இருந்து திறமையான ஊழியர்களை அழைக்கப் பிரிட்டன் நிறுவனங்கள் அமைப்பு ரிஷி சுனக் அரசிடம் கோரிக்கை வைத்ததாக நேற்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது

இந்த நிலையில் இன்று பிரிட்டன் நாட்டின் பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் இந்தியா மற்றும் இந்திய மக்களுக்காகவும் சிறப்புத் திட்டத்தை அறிவித்து அதை உடனடியாக அமல்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

பிரிட்டன் நிறுவனங்களின் முக்கிய கோரிக்கை.. ரிஷி சுனக் அரசு செய்யுமா..? இந்தியர்களுக்கு லாபமா..? பிரிட்டன் நிறுவனங்களின் முக்கிய கோரிக்கை.. ரிஷி சுனக் அரசு செய்யுமா..? இந்தியர்களுக்கு லாபமா..?

இந்தியர்கள்

இந்தியர்கள்

இந்தியர்கள் வர்த்தகத் துறையில் மட்டும் அல்லாமல் முன்னணி நாடுகளின் அரசு அமைப்புகளிலும் பணியாற்றி வரும் நிலையில் திறமையான இந்தியர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜி20 மாநாடு

ஜி20 மாநாடு

இந்த நிலையில் இந்தோனேசியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்துப் பேசிய அடுத்த சில மணி நேரத்தில் பிரிட்டன் அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு ஒவ்வொரு வருடமும் 3000 திறமையான மற்றும் இளம் ப்ரொபஷனல் ஊழியர்களை இந்தியாவில் இருந்து அழைக்கும் சிறப்பு விசா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

3000 இந்தியர்களுக்கு விசா

3000 இந்தியர்களுக்கு விசா

இதைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் உலகில் முதல் முறையாக இந்தியா தான் இத்தகைய சிறப்பு விசா திட்டத்தின் கீழ் நன்மை அடைகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு இந்தியா - பிரிட்டன் மத்தியிலான மைக்ரேஷன் - மொபிலிட்டி பார்ட்னர்ஷிப் வலிமை அடையும் எனத் தெரிவித்துள்ளது.

2 வருடம் விசா

2 வருடம் விசா

இத்திட்டம் குறித்து ரிஷி சுனக் அலுவலகம் வெளியிட்ட டிவீட்டில் இன்று பிரிட்டன் - இந்தியா யெங் ப்ரொபஷனல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 18-30 வயதுடைய திறமையான 3000 இந்தியர்கள் பிரிட்டன் நாட்டில் 2 வருடம் தங்கி பணியாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரிட்டன் அரசிடம் இருந்து இந்த அறிவிப்பு இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 2 நாள் ஜி20 உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி மற்றும் ரிஷி சுனக் சந்தித்துப் பேசிய சில மணிநேரத்தில் வெளியானது. ரிஷி சுனக் பிரதமர் பதவியை ஏற்ற பின்பு நரேந்திர மோடியை முதல் முறை சந்திக்கிறார். இருவரின் சந்திப்பு குறித்துப் பிரதமர் மோடியின் அலுவலகம் டிவீட் செய்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா

இங்கிலாந்து - இந்தியா

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எந்த நாட்டைக் காட்டிலும் இங்கிலாந்து இந்தியாவுடன் அதிகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மொத்த சர்வதேச மாணவர்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் அதாவது கால் பங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள்.

95,000 வேலைவாய்ப்புகள்

95,000 வேலைவாய்ப்புகள்

மேலும் இங்கிலாந்தில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் செய்த முதலீடுகள் மூலம் இங்கிலாந்து முழுவதும் சுமார் 95,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வரும் 3000 இந்தியாவில் படித்தவர்களுக்கு அளிக்கப்படும் விசா மூலம் இந்த இந்தியர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

 பணக்காரர்களுக்கு செக் வைத்த ரிஷி சுனக்.. பிரிட்டன் மக்களை கவர்ந்த புதிய பிரதமர்..! பணக்காரர்களுக்கு செக் வைத்த ரிஷி சுனக்.. பிரிட்டன் மக்களை கவர்ந்த புதிய பிரதமர்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rishi Sunak Approves 3000 UK visas for professional Indians; Check full details, Who can Avail special visa

Rishi Sunak Approves 3000 UK visas for professional Indians; Check full details, Who can Avail this special visa for 2 years to live and work in UK for age between 18-30 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X