பிரிட்டன் இளவரசி எலிசபெத் மறைந்த நிலையில் பல தசாப்தங்களுக்குப் பின்பு பிரிட்டன் நாட்டின் ராஜா-வாக மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது, அந்நாட்டின் தேசிய கீதம் வரிகளைத் தொடர்ந்து, ரூபாய், நாணயங்கள், அரசு அறிக்கைகளில் குறிப்பிடப்படும் வசனங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில் பிரிட்டன் மக்கள் மட்டும் அல்லாமல் பிரிட்டன் மன்னராக இருக்கும் சார்லஸ் உட்பட அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது சார்லஸ் முகம் கொண்ட நாணயங்களும், பணமும் தான்.
இந்த நிலையில் ரிஷி சுனக் தலைமையிலான அரசு சார்ல்ஸ் முகம் கொண்ட முதல் நாணயத்தை வெளியிட்டு உள்ளது.
பிரிட்டன் போஸ்ட் ஆபீஸ்
டிசம்பர் 8ஆம் தேதி முதல் பிரிட்டன் போஸ்ட் ஆபீஸ்-களில் தற்போது பிரிட்டன் மன்னராக இருக்கும் 3ஆம் சார்ல்ஸ் முகம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
50 பென்ஸ் நாணயங்கள்
முதல் கட்டமாகச் சார்லஸ் முகம் கொண்ட 50 பென்ஸ் நாணயங்கள் 96 லட்சம் நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின்பு எலிசபெத் முகம் கொண்ட நாணயங்களுக்குப் பதிலாகச் சார்லஸ் முகம் கொண்ட நாணயங்கள் வந்துள்ளது.
மூன்றாம் சார்லஸ் மன்னர்
இன்று இங்கிலாந்தின் நாணய உற்பத்தியில் ஒரு புதிய சகாப்தம் துவங்குகிறது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட நாணயம் புழக்கத்தில் வந்து உள்ளது. நாணய சேகரிப்பாளர்கள் தங்கள் சேகரிப்பில் சேர்க்க அல்லது முதல் முறையாக ஒன்றைத் தொடங்க இது ஒரு அருமையான வாய்ப்பு என்று ராயல் மிண்ட் அணைப்பின் கலெக்டர் சேவை பிரிவின் இயக்குனர் ரெபேக்கா மோர்கன் கூறியுள்ளார்.
96 லட்சம் நாணயங்கள்
முதல் கட்டமாகச் சார்லஸ் முகம் கொண்ட 50 பென்ஸ் நாணயங்கள் 96 லட்சம் நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தேவைக்கும் ஏற்ப பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேங்க் ஆப் இங்கிலாந்து
சில மாதங்களுக்கு முன்பே பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பில் மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட பிரிட்டன் கரன்சி 2024 ஆம் ஆண்டு மத்தியில் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
பவுண்ட் கரன்சி
விரைவில் பிரிட்டன் கரன்சியில் இடம்பெறப்போகும் 3ஆம் சார்லஸ் மன்னரின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்தப் புகைப்படம் 5, 10, 20, 50 பவுண்ட் கரன்சி நோட்டுகளில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 1960 முதல் ராணி 2வது எலிசபெத் முகம் அந்நாட்டுக் கரன்சியில் உள்ளது.
பழைய மற்றும் கிழிந்த கரன்சிகள்
இதேபோல் தற்போது புழக்கத்தில் இருக்கும் எலிசபெத் முகம் கொண்ட கரன்சி அனைத்தும் புழக்கத்தில் இருக்கும், தற்போது இருப்பில் இருக்கும் கரன்சிகளும் புழக்கத்திற்கு வரும். மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட பிரிட்டன் கரன்சி பழைய மற்றும் கிழிந்த கரன்சிகளுக்கு மாறாக அளிக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வரும் என்று பேங்க் ஆப் இங்கிலாந்து அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications