பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக் சில மாதங்களுக்கு முன்பு நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது பலருக்கும் நினைவிருக்கும், இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதாலும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை மணந்த காரணத்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ரிஷி சுனக் மிகவும் பிரபலம்.
இந்த நிலையில் அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூரத்தி ஆகியோர் குடும்பத்துடன் லண்டனில் இருந்து சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் மாமனார் நாரயணமூர்த்தி மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரை சந்திக்க வந்திருந்தனர்.

அக்ஷதா மூரத்தி அடிக்கடி இந்தியாவுக்கு வருவதும், நாரயணமூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோருடன் பெங்களூரில் முக்கிய பகுதிகளில் ஜாலியாக சுற்றுவது வழக்கம், ஆனால் இந்த முறை ரிஷி சுனக் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் பெங்களூரில் பல முக்கிய இடத்தில் குடும்பத்துடன் சுற்றியுள்ளார்.
இப்படி ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோர் தற்போது பெங்களூரில் கார்ப்ரேட் ஊழியர்களின் புதிய Hangout Spot ஆக மாறியிருக்கும் Thrid Wave Coffee ஷாப்-க்கு சென்று ஜாலியாக காஃபி குடித்தது மட்டும் அல்லாமல் அனைவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு கலக்கியுள்ளார் ரிஷி சுனக்.
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி Thrid Wave Coffee ஷாப்-ல் இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது மட்டும் அல்லாமல் இருவரும் கவுண்டரில் ஆர்டர் செய்ய உணவுகளை தேர்வு செய்யும் ரோமான்டிக் போட்டோவும் வெளியாகியுள்ளது.

44 வயதான ரிஷி சுனக் தனது டிரேட்மார்க் ஆன வெள்ளை சட்டையும் கருப்பு பேன்டும் அணிந்திருந்தார், அக்ஷதா மூர்த்தி எப்போதும் போல் தனக்கே உரிதான எளிமையான வெள்ளை நிற குர்தாவை அணிந்திருந்தார்.
இதேபோல் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி, தெற்கு பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்துக்குச் சென்று வழிப்பட்டனர். இப்போது இவர்களுடன் ரிஷி சுனக்-ன் மாமனார் என்ஆர் நாராயண மூர்த்தி மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரும் இருந்தனர்.


Click it and Unblock the Notifications