பிரிட்டன் நாட்டின் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதமராக இருக்கும் ரிஷி சுனக், ஜி20 கூட்டத்திற்கு தனது மனைவி அக்ஷதா மூர்த்தி உடன் கலந்துக்கொண்டது மட்டும் அல்லாமல் பல பள்ளி, கல்லூரிகளுக்கும் பல கோவில்களுக்கும் சென்றனர்.
பிரிட்டன் நாட்டின் பிரதமரான ரிஷி சுனக் இந்தியாவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக வந்திருக்கும் வேளையில், செய்தியாளர்களிடம் பேசும் போது கோவில்களுக்கு சென்றது குறித்து பேசும் போது தான் பெருமைக்குரிய ஹிந்து என கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ரிஷி சுனக் பயணம், தான் ஒரு proud hindu என கூறியது என அனைத்தையும் தாண்டி டெல்லி ஜி20 கூட்டத்தின் ஒரு நிகழ்வில் ரிஷி சுனக்-ன் ஒரு போட்டோ தற்போது வைரலாகியுள்ளது. அப்படி என்ன போட்டா என்று தானே கேட்குறீங்க.. வாங்க சொல்றேன்.
ஜி20 கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசுகையில் அவர் உட்கார்ந்து இருந்த நிலையில்,அருகில் இருக்கைகள் எதுவும் இல்லாத காரணத்தால் ரிஷி சுனக் ஒரு கால் முட்டிப்போட்டு அவருக்கு இணையாக கீழ் இறங்கி பேசும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோ-வை டிவிட்டரில் அயனாங்ஷா மைத்ரா என்ற யூசர் பதிவிட்ட நிலையில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரிஷி சுனக் தரையில் ஒரு கால் மட்டும் முட்டிப்போட்டு ஷேக் ஹசீனாவுடன் பேசியது இடம்பெற்று இருந்தது.
இந்த போட்டோவை பதிவிட்ட அயனாங்ஷா மைத்ரா இந்த பெரிய மனுஷனுக்கு எந்த ஈகோ-வும் இல்லை! இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவுடன் ஒரு தரையில் முட்டிப்போட்டு பேசுகிறார் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த புகைப்படத்தில் மற்றொரு கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால், இப்புகைப்படத்தில் பின்னால் இருப்பவர்கள் பெரும்பாலானோர் காலணிகளை அணிந்திருக்கும் வேளையில் ரிஷி சுனக் வெறும் காலில் உள்ளார் என்பது தான்.
காலணிகள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை ரிஷி சுனக் மற்ற G20 நாடுகளின் தலைவர்களுடன் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார், அப்போது இந்த புகைப்படம் எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

டெல்லியில் நடந்த ஜி20 நாடுகளின் கூட்டத்திற்கு பல நாடுகளின் தலைவர்கள் வந்திருந்த நிலையில், ஒவ்வொருவரும் ஒரு விதித்தில் பெரிய ஆள் என்பதால் யாருக்கும் யாரும் குறைந்தவர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படியிருக்கும் போது ரிஷி சுனக் தரையில் முட்டிப்போட்டு பேசுவது அவருடைய எளிமையான மனநிலையை காட்டுக்கிறது.
மேலும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 75 வயதாகும் வேளையில் ரிஷி சுனக்கிற்கு 43 வயது மட்டுமே ஆன நிலையில், இவருடைய வயதுக்கும், அனுபவத்திற்கும் மரியாதை கொடுக்கும் விதமாகவும் ரிஷி சுனக் செய்திருக்க கூடும். எப்படியிருந்தாலும் ரிஷி சுனக் சூப்பர்ப்பா..!!


Click it and Unblock the Notifications