பிரிட்டன் பொருளாதாரம் ரெசிஷனில் மாட்டிக் கொண்டு இருக்கும் வேளையில் அந்நாட்டு ஏழை மக்களுக்குச் சிறப்பு நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்திருக்கும் வேளையில், அந்நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்புச் சந்தையில் இருக்கும் திறன் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
இந்திய அரசும், பிரிட்டன் அரசும் இணைந்து 18 முதல் 30 வயதுடைய பல ஆயிரம் இந்தியர்களுக்குப் பலன் அளிக்கும் வரையில் புதிய விசா திட்டத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா மற்றும் பிரிட்டன் இணைந்து Young Professionals Scheme என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தச் சிறப்பு இந்தியர்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது, இந்தத் திட்டத்தின் கீழ் விசா பெறுபவர்கள் பிரிட்டன் நாட்டில் 2 வருடம் தங்கி பணியாற்றும் வாய்ப்பை இந்தியர்கள் பெற உள்ளனர்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்பட்ட நாளில் இருக்கு பிரிட்டன் நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கும் சரி, இந்தியர்களுக்கும் சரி புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என அதிகளவில் நம்பியிருந்தனர்.
புதிய Young Professionals திட்டம்
இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ரிஷி சுனக் சந்தித்துப் பேசிய நிலையில் இந்தச் சிறப்பு Young Professionals Scheme திட்டத்தைச் செயல்படுத்த இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
18 முதல் 30 வயது வரம்பு
இந்தத் திட்டத்தின் கீழ் 18 முதல் 30 வயதுடைய இளம் தலைமுறையினர் பிரிட்டன் நாட்டிற்குச் சென்று 2 வருடம் தங்கி பணியாற்றும் வாய்ப்பை பெற முடியும். இந்தத் திட்டம் பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு மட்டும் என்பதால் இதில் பிற நாட்டவர்கள் போட்டிப்போட முடியாது.
பிரிட்டன் நாட்டவர்கள்
மேலும் இந்தியர்கள் பிரிட்டன் நாட்டுக்குச் செல்வதைப் போல் பிரிட்டன் நாட்டவர்களும் இந்தியாவிற்கு வந்து 2 வருடம் பணியாற்ற முடியும்.
ஸ்டூடென்ட் விசா
ஜூன் 2022 உடன் முடிந்த 12 மாத காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டு அரசு அதிக ஸ்டூடென்ட் விசா அளிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் சீனா-வை இந்திய பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது எனப் பிரிட்டன் ஹோம் ஆபீஸ் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
3000 திறமையான இந்தியர்கள்
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசு ஒவ்வொரு வருடமும் 3000 திறமையான மற்றும் இளம் ப்ரொபஷனல் ஊழியர்களை இந்தியாவில் இருந்து அழைக்கும் சிறப்பு விசா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. உலகில் முதல் முறையாக இந்தியா தான் இத்தகைய சிறப்பு விசா திட்டத்தின் கீழ் நன்மை அடைகிறது.
இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும்
இங்கிலாந்தில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் செய்த முதலீடுகள் மூலம் இங்கிலாந்து முழுவதும் சுமார் 95,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வரும் 3000 இந்தியாவில் படித்தவர்களுக்கு அளிக்கப்படும் விசா மூலம் இந்த இந்தியர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications