Rishi Sunak: பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.. மீண்டும் கோல்ட்மன் சாக்ஸ்-ல் சேர்ந்த EX-பிரதமர்..!

பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக் கடந்த ஆண்டு அந்நாட்டில் நடந்த பொது தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த நிலையில் அரசியல் வாழ்க்கையில் இருந்து மொத்தமாக வெளியேறினார். இந்த தோல்விக்கு பின்பு இந்தியாவில் பல இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றது மட்டும் அல்லாமல் பெங்களூரில் அவரது மாமனார் வீட்டில் பல நாட்கள் கழித்தார்.

இந்த நிலையில் Rishi Sunak அடுத்தக்கட்ட பணியாக உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மன் சாக்ஸில் மூத்த ஆலோசகராக மீண்டும் பணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishi Sunak: பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி! மீண்டும் கோல்ட்மன் சாக்ஸ்-ல் சேர்ந்த EX-பிரதமர்

சிவாஜி படத்தில் ரஜினி அனைத்தையும் இழந்த பின்பு ரோட்டு கடையில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, அடுத்த என்ன செய்யபோறோம் என யோசித்திக்கொண்டு இருக்கையில், விவேக் பேசாம நீ திரும்பவும் அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என கூறுவார். இதேபோல் ரிஷி சுனக் பிரிட்டன் அரசியிலில் இதுவரையில் எந்தொரு இந்தியரும் எட்டாத உயரத்தை அடைந்த பின்பு தற்போது மீண்டும் அவருடைய ஆஸ்தான இடத்திற்கே சென்றுள்ளார்.

கோல்ட்மன் சாக்ஸ் என்டரி:
2024 ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் படுதோல்விக்குப் பின்னர், ரிஷி சுனக் மேற்கொள்ளும் முதல் முக்கிய முழு நேர பணியாகும். ஃபைனான்ஷியல் டைம்ஸ் அறிக்கையின்படி, ரிஷி சுனக் 2001 முதல் 2004 வரை கோல்ட்மன் சாக்ஸில் சம்மர் இன்டர்ன் ஆக இணைந்து ஜூனியர் அனலிஸ்ட் ஆக பணியாற்றினார்.

நீண்ட இடைவெளிக்கு பின்பு இப்போது, ரிஷி சுனக் கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் தலைமை குழுவிற்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்கவுள்ளார். இதன் மூலம் ரிஷி சுனக்-ன் கரியர் வட்டம் முழுமை அடைந்துள்ளது. எங்கு துவங்கினாரோ, அங்கேயே வந்துள்ளார்.

ரிஷி சுனக், கோல்ட்மன் சாக்ஸில் மூத்த ஆலோசகராக இணைவது, அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இதுக்குறித்து கோல்ட்மன் சாக்ஸின் தலைமை நிர்வாகி டேவிட் சாலமன் கூறுகையில், "ரிஷியை மூத்த ஆலோசகராக மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் எங்கள் நிறுவனத்திற்கு முக்கிய பங்களிப்பாராக இருப்பார்" என்று ஃபைனான்ஷியல் டைம்ஸிடம் தெரிவித்தார்.

Rishi Sunak: பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி! மீண்டும் கோல்ட்மன் சாக்ஸ்-ல் சேர்ந்த EX-பிரதமர்

மாமனார் நாராயண மூர்த்தி:
ரிஷி சுனக், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். ரிஷி சுனக், 2009 ஆம் ஆண்டு நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்தார். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்த போது சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். நாராயண மூர்த்தி, சுனக்கின் அரசியல் பயணத்திற்கு முக்கிய உந்துதலாக இருந்தவர். 2022 இல், சுனக் பிரதமரான போது, நாராயண மூர்த்தி, "ரிஷியைப் பற்றி பெருமைப்படுகிறோம்" என்று பாராட்டினார். நாராயணமூர்த்தி, ரிஷி சுனக்கை அரசியலில் ஈடுபட ஊக்குவித்தவர், "வணிகத்தை விட அரசியல் மூலம் உலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்று அறிவுறுத்தியதாக ரிஷி சுனக் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

Rishi Sunak: பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி! மீண்டும் கோல்ட்மன் சாக்ஸ்-ல் சேர்ந்த EX-பிரதமர்

அக்ஷதா மூர்த்தி சொத்து மதிப்பு:
நாராயண மூர்த்தி மகளான அக்ஷதா மூர்த்தி, இன்போசிஸில் 0.93% பங்குகளை வைத்திருக்கிறார், இது சுமார் 690 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையது. மேலும், ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோர் நாராயண மூர்த்தியின் கட்டமரான் வென்சர்ஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாகவும் இருந்தனர்.

UK பிரதமராக ரிஷி சுனக்கின் முக்கிய முடிவுகள்:
ரிஷி சுனக், 2022 அக்டோபர் முதல் 2024 ஜூலை வரை பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில், பிரிட்டன் நாட்டில் பொருளாதார நெருக்கடி, தொழில்துறை பாதிப்பு மற்றும் உலகளாவிய பதற்றங்கள் நிறைந்த சவாலான சூழலில் தான் அவர் அந்நாட்டின் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தார்.

அவரது ஆட்சி காலத்திலும், நிதியமைச்சராக இருந்த காலக்கட்டத்திலும் எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகளில் ஒன்று, பொருளாதார நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிகப்படியான முயற்சிகளை ரிஷி சுனக் மேர்கொண்டது தான். கொரோனா காலத்தில் இவர் எடுத்த பல முடிவுகள், நிதியுதவிகள் பிரிட்டன் நாட்டில் பல தொழில்களை மூடுவதை தடுத்தார்.

Rishi Sunak: பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி! மீண்டும் கோல்ட்மன் சாக்ஸ்-ல் சேர்ந்த EX-பிரதமர்

உதாரணமாக 2022 இல், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் வரி குறைப்பு திட்டங்களை வெளிப்படையாக எதிர்த்து, நிதி மறுசீரமைப்பு தேவை என வலியுறுத்தினார். இவருடைய கருத்தின் எதிரொலியாக செய்யப்பட்ட மாற்றங்கள் பவுண்ட் மதிப்பின் சரிவைத் தடுத்தது.

மேலும், ரிஷி சுனக் தேசிய சுகாதார சேவை (NHS) காத்திருப்பு பட்டியலை குறைக்க முயற்சித்தார், ஆனால் இந்த முயற்சி முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

மேலும் ரிஷி சுனக், புலம்பெயர்ந்தோர் பிரச்சினையைத் தீர்க்க சட்டவிரோத அந்நாட்டிற்குள் வரும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார், ஆனால் இதுவும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

அரசியல் தோல்வி:
2024 ஜூலை தேர்தலில், ரிஷி சுனக்-ன் கன்சர்வேட்டிவ் கட்சி முந்தைய பொது தேர்தலில் 365 இடங்களிலிருந்து வெற்றி பெற்று இருந்த நிலையில் இத்தேர்தலில் 121 இடங்களாக சரிந்து. இது பிரிட்டன் அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியாகும். இதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் பிரதமர் பதவியையும், கட்சித் தலைமையையும் ராஜினாமா செய்தார்.

இப்போதும் அவர் ரிச்மண்ட் மற்றும் நார்த்ஆலர்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இந்த தோல்விக்குப் பின்னர், ரிஷி சுனக் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தாலும், ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வந்தார். தற்போது கோல்ட்மன் சாக்ஸில் முக்கிய பதவியில் இணைகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+