உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பிரச்சனையானது மெல்ல மெல்ல உலக நாடுகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
குறிப்பாக தற்போது தான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருந்த பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு புறம் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், மறுபுறம் சப்ளை சங்கியில் பாதிப்பு, இதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.
செலவு அதிகரிக்கும்
இதனை ஏற்கனவே பலரும் அறிந்திருக்கலாம். இந்தியா பயன்படுத்தும் பெரும்பகுதி எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதே. அதிலும் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ள பிரச்சனைக்கு மத்தியில் இந்தியாவில் இறக்குமதி செலவினம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என்பது இன்னொரு பிரச்சனை.
இறக்குமதி
இந்தியா பெரியளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஜெம்ஸ் & ஜூவல்லரி, சமையல் ஆயில், உரங்கள் உள்ளிட்ட பலவும் அதிகளவில் இறக்குமதி செய்கின்றது. இதனால் இறக்குமதி செய்யப்படும் செலவானது நடப்பு நிதியாண்டில் 600 பில்லியன் டாலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கலாம்
இந்த நெருக்கடியான பிரச்சனைக்கு மத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம். இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு மேற்கொண்டு சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பானது 75 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.
இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு
இது குறித்து ரேட்டிங் நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ், தற்போதுள்ள அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்கலாம். குறிப்பாக சமையல் எண்னெய் மற்றும் கேஸ், ஜெம்ஸ் & ஜூவல்லரி, கச்சா எண்ணெய், உரங்கள் என பலவும் இதனை ஊக்கப்படுத்தலாம். ஆக இறக்குமதி செலவினமானது 2022ம் நிதியாண்டில் 600 பில்லியன் டாலரை தாண்டலாம். இது முதல் 10 மாதங்களில் 492.9 பில்லியன் டாலராக இருந்தது என கூறியுள்ளது.
பணவீக்கம்
ஆக மேற்கண்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மேற்கோண்டு பணவீக்கம் உச்சம் தொடலாம். இது நடப்பு கணக்கு பற்றாக்குறையும் தூண்டலாம். நாணயத்தின் மதிப்பினை சரியத் தூண்டலாம். இதன் காரணமாக பொருளாதாரம் சரிவடையலாம். குறிப்பாக ஒரு பேரலுக்கு கச்சா எண்ணெய் விலை 5 டாலர் அதிகரிக்கலாம் என்றாலும் கூட, இது நடப்பு கணக்கு பாற்றாக்குறையை 6.6 பில்லியன் டாலர் அதிகரிக்கலாம்.
கமாடிட்டி விலை அதிகரிப்பு
ரஷ்யா - உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் ஏற்கனவே பல கமாடிட்டிகளின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தற்போது தான் மீட்சி கண்டு வரும் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் அதிகரித்து வரும் விலைவாசியானது சாமானிய மக்களின் வாழ்வில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தும்.
More From GoodReturns

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications