இந்திய மக்களின் வருமான உயர்வுக்கும், விலைவாசி உயர்வுக்குமான வித்தியாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெரும் பகுதி மக்கள் தங்களுக்கான தேவை அதிகளவில் கடன் மூலம் பூர்த்தி செய்து வரும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால் இதேவேளையில் வேலைவாய்ப்பில் நிலையற்ற தன்மை, வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு இல்லாமல் இருப்பது, ஏஐ மூலம் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றின் மூலம் தனிநபர் வருமானத்தில் பதிவாகும் தாக்கம் மூலம் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்தத் தவறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை CRIF ரிப்போர்ட் காட்டுகிறது.

இந்தியாவில் ரீடைல் கடன் அளவு செப்டம்பர் காலாண்டு முடிவில் வருடாந்திர அடிப்படையில் சுமார் 18.8 சதவீதம் அதிகரித்து 185.2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த ரீடைல் கடனில் வீட்டுக்கடன் துவங்கி, கார் கடன், பைக் கடன், இதர வாகன கடன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கடன், கிரெடிட் கார்டு என அனைத்தும் அடங்கும்.
தற்போது பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு கடன் பிரிவிலும் கடன் வாங்கியவர்கள் திரும்பி செலுத்தாதோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் ஒட்டுமொத்த வங்கித் துறையும் அலர்ட் மோடில் இறங்கியுள்ளது.
உதாரணமாகச் செப்டம்பர் மாத முடிவில் தங்க நகைக் கடன் வாங்கியோர் திரும்பி செலுத்தாதோர் அளவு காலாண்டு அடிப்படையில் 1.3 சதவீதத்தில் இருந்து 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேபோல் கன்ஸ்யூமர் பொருட்களுக்கான கடனில் 1.6 சதவீதத்தில் இருந்து 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பர்சனல் லோன் பிரிவில் 2.3 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இரு சக்கர வாகன பிரிவில் 4 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதோடு விவசாயத்திற்காக வாங்கப்படும் டிராக்டர் மீதான கடனை திருப்பி செலுத்தாதோர் அளவு 4.6 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்திற்காக வாங்கப்படும் கடன்களில் திருப்பி செலுத்தாதோர் அளவு 5 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரீடைல் கடன் பிரிவில் 31- 180 நாட்களுக்கான கடன்களில் திருப்பி செலுத்தாதோர் அளவு 2.6 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் 185.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரீடைல் கடனில் 25.1 சதவீதம் அதாவது 46.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பங்கீட்டை வீட்டுக்கடன் பிரிவு மட்டுமே வகிக்கிறது, இதேபோல் தங்க நகை கடன் பிரிவில் 23.3 லட்சம் கோடி ரூபாய்.
ரீடைல் கடன் பிரிவில் வேகமாக வளர்ச்சி அடையும் கடனாக விளங்குவதும் தங்க நகை கடன் பிரிவு தான், வருடாந்திர அடிப்படையில் சுமார் 60.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications