டயர் 2 நகரங்களில் முதலீடு செய்யும் NRI-கள்.. இனி இந்த நகரங்கள் தான் பெஸ்ட்!

சென்னை: தற்போது மெட்ரோ அல்லாத நகரங்களில் இடம் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மெட்ரோ அல்லாத வளர்ந்து வரும் நகரங்களில் மேம்பட்ட வாழ்க்கைத் தரம், நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகள் அமைவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் இந்தியர்கள் இது போன்ற நகரங்களில் இடம் வாங்குவதற்கு ஈர்க்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் மக்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மெட்ரோ நகரங்களில் குடியிருப்பு வசதிக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், இது போன்ற மெட்ரோ நகரங்களில் அதிக அளவில் மக்கள் தொகை உள்ளதால், இடத்தின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் வணிகம் மற்றும் வீட்டு வசதிக்காக மக்கள் பிற இடங்களைத் தேர்ந்தெடுக்கும் நிலையும் உள்ளது. ஆதலால் மெட்ரோ அல்லாத நகரங்களில் மக்கள் குடியேறுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 டயர் 2 நகரங்களில் முதலீடு செய்யும் NRI-கள்.. இனி இந்த நகரங்கள் தான் பெஸ்ட்!

தற்போது அந்த வரிசையில் NRI-கள் மற்றும் இந்தியர்களும் இணைந்துள்ளனர். மெட்ரோ நகரங்களை விட கல்வி செலவு, சுகாதார வசதிகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவை இதுபோன்ற மெட்ரோ அல்லாத நகரங்களில் சிறப்பாக இருப்பதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.

இது போன்ற வசதிகளைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ அல்லாத டயர் 2 நகரங்களில் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ரியல் எஸ்டேட் மேம்பாடுகளுக்கான தேவை உருவாகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளாராவெஸ்ட் டெக்னாலஜிஸின் இணை நிறுவனர் மானங்கி பருலேகர், அதிக அளவில் NRI-கள் மற்றும் இந்தியர்கள் டயர் 2 நகரங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

சொத்தின் மதிப்பு: டயர் 2 நகரங்களில் இடம் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. குடும்பச் செலவு மற்றும் பிற செலவுகள் டயர் 1 நகரங்களை விட டயர் 2 நகரங்களில் குறைவாகவே உள்ளது. அதேபோல, இது போன்ற நகரங்களில் சொத்தின் மதிப்பும் குறைவானதாக இருக்கிறது. இதுவே NRI-கள் மற்றும் இந்தியர்கள் அலை டயர் 2 நகரங்களுக்கு திரும்புவதற்கான காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

வாடகை வருவாய்: டயர் 1 நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பதே சிரமமாக உள்ளது. உதாரணமாக இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், பெங்களூரில் வீட்டு வாடகை 31 சதவீதம் மற்றும் ஹைதராபாத்தில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அனாரோக் ரிப்போர்ட் கூறுகிறது. இந்த வாடகை அதிகரிப்பு டயர் 1 நகரங்களில் இருக்கும் பலருக்கு ஈடுகட்ட முடியாததாக இருக்கலாம். எனவே, இது போன்ற மக்கள் டயர் 2 நகரங்களுக்குக் குடிப்பெயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிளாட்களை வாங்குதல்: NRI-கள் மற்றும் இந்தியர்கள் இதுபோன்ற டயர் 2 நகரங்களில் பிளாட்களை வாங்கி வைக்க விரும்புகின்றனர். வரும் நாட்களில் மக்கள் டயர் 2 நகரங்களுக்கு குடிபெயர்ந்தால், அதனை அதிக விலைக்கு விற்கலாம் என்றும் நம்புகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+