மாதம் மாதம் கிரிசில் நிறுவனம் விலைவாசியை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் ஒரு அறிக்கையை வெளியிடும். இதை வைத்து நாம் காய்கறிகளின் விலையில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் இறைச்சிகளில் ஏற்பட்ட ஏற்றம் குறித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்று கிரிசல் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி அதிக காய்கறி விலையின் காரணமாக செப்டம்பர் மாதம் சைவ தாலியின் (வெஜ் மீல்ஸ்) விலை கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே சமயம் கோழி விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக அசைவ தாலியின் (நான் வெஜ் மீல்ஸ்) விலை 2 சதவீதம் குறைந்துள்ளது.
அப்படியானால் செப்டம்பர் மாதத்தில் ஒரு பிளேட் வெஜ் மீல்ஸ்-இன் மதிப்பிடப்பட்ட விலை 31.3 ரூபாயாகவும், ஒரு பிளேட் நான்வெஜ் மீல்ஸ்-இன் விலை 59.3 ரூபாயாகவும் இருந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது. காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக காய்கறிகளைக் கொண்ட வெஜ் மீல்ஸ் விலை உயர்ந்துள்ளது.

வெஜ் மீல்ஸ் விலையில் 37 சதவீதம் காய்கறிகளைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்ததை விட வெங்காய விலை 53 சதவீதமும், உருளைக்கிழங்கு விலை 50 சதவீதமும், தக்காளியின் விலை 18 சதவீதமும் உயர்ந்துள்ளன.
இதற்கு காரணம் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிக மழைப்பொழிவு காரணமாக தக்காளி உற்பத்தி பாதித்துள்ளது என்று இந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
9 சதவீத பங்கு வகிக்கும் பருப்பு வகைகளின் விலை கடந்த ஆண்டு உற்பத்தி வீழ்ச்சியின் காரணமாக 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதன் காரணமாக விலையேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.
வெஜ் மீல்ஸ் விலையை விட 2 மடங்கு அதிக விலை கொண்ட நான்வெஜ் மீல்ஸ் பிராய்லர் கோழி விலை சரிவின் காரணமாக குறைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிராய்லர் கோழியின் விலை 13% குறைந்துள்ளது. நான்வெஜ் மீல்ஸ்-இல் 50 சதவீதம் கோழியின் பங்கு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் விலை ஏற்றத்தில் மாற்றங்கள் இருந்தாலும் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது காய்கறி மற்றும் இறைச்சி ஆகியவற்றின் விலை ஒரே மாதிரியாக இருப்பதாக கிரிசில் அறிக்கை தெரிவித்துள்ளது.
வெங்காய விலை மாதம் தோறும் 14 சதவீதம் அதிகரித்தாலும், விலை சற்று சீராக இருந்து வருகிறது. ஏனெனில் உருளைக்கிழங்கு வலையில் 2 சதவீத சரிவும், தெற்கு மற்றும் மேற்கு சந்தைகளில் இருந்து அதிக வரத்து காரணமாக தக்காளி விலையில் 9 சதவீத சரிவும் இருப்பதால் வெஜ் மீல்ஸ் விலை மேலும் அதிகாரிக்காமல் உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications