இந்தியாவை பொறுத்தவரை திருமணம் நிகழ்வுகள் என்றாலே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுவார்கள். திருமணத்தை நடத்தக்கூடிய குடும்பத்தினரை பொறுத்தவரை தங்களின் வாழ்நாள் சேமிப்புகளை எல்லாம் இந்த திருமண செலவுக்காகவே கரைத்து விடுவார்கள் .
பெரும்பாலான குடும்பங்களில் கடன் வாங்கி பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவார்கள் . திருமணத்தை அதிக செலவு செய்து நடத்துவது என்பது தற்போது ஒரு குடும்ப அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது . அதுவும் இந்த நவீன காலத்தில் திருமண நிகழ்வுகளை வித்தியாசமான இடங்களில் வித்தியாசமான முறைகளில் நடத்துவது மிகவும் பிரபலம் ஆகி வருகிறது. டெஸ்டினேஷன் வெட்டிங் , அவுட் டோர் வெட்டிங் என இதற்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது .

இப்படி நாளுக்கு நாள் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகள் நவீனமாக நவீனமாக அதற்காக நாம் செய்யக்கூடிய செலவுகளும் அதிகரித்து தான் வருகின்றன . விலைவாசி உயர்வு ஒருபுறம் இருந்தாலும் தற்போது மக்களே ஒரு திருமணத்தை இப்படித்தான் நடத்தப் போகிறேன் என ஒரு கனவோடு தான் திருமண நிகழ்வுகளையே திட்டமிடுகிறார்கள் . அந்த வகையில் இந்தியாவில் சராசரியாக ஒரு திருமணத்தை நடத்துவதற்கு 39.5 லட்சம் ரூபாய் செலவாகிறது என வெட்மிகுட் என்ற இணையதளம் கூறுகிறது.
இதுவே டெஸ்டினேஷன் வெட்டிங் என்றால் 58 லட்சம் ரூபாய் ஆகிறது. திருமண செலவு என்பது அது நடைபெறும் நகரங்களை பொறுத்து மாறுபடும் என சொல்லப்படுகிறது . ஆனால் இந்தியாவில் திருமணத்திற்காக செலவு செய்யப்படும் பணத்தின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 8% என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறதாம். அதாவது மக்கள் திருமணத்திற்காக அதிக செலவுகளை செய்வதற்கு தயாராக உள்ளனர் என கூறுகிறது .
இவ்வாறு பெரிய அளவில் மாத கணக்கில் திட்டமிட்டு ஒவ்வொன்றையும் பார்த்து ஒரு திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் திடீரென ஒரு மருத்துவ அவசரம் ஏற்படுகிறது அல்லது ஒரு மோசமான வானிலை போன்ற இயற்கை பேரிடர் நிகழ்கிறது என்பன உள்ளிட்ட சில காரணங்களால் திருமணங்கள் நின்று போகக்கூடிய சூழலும் உண்டாகின்றன. அந்த சமயத்தில் இந்த திருமண முன்னேற்பாடுகளுக்காக செய்த லட்சக்கணக்கான பணம் நம் கைகளை விட்டு போய்விடும் . இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக தான் இந்தியா சந்தையில் வெட்டிங் இன்சூரன்ஸ் எனப்படும் திருமண காப்பீடு திட்டங்கள் கவனம் பெறுகின்றன.

இந்தியாவில் தற்போது திருமணங்கள் என்பது அதிக செலவு கொண்ட நிகழ்வுகளாக மாறி வருகின்றன . அந்த சமயத்தில் திடீரென திருமணம் நின்று போவது அல்லது ஏதேனும் விபத்து நேர்வது அல்லது திருமண நிகழ்வில் மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போவது என்பன உள்ளிட்ட சம்பவங்கள் நேர்ந்தால் இந்த திருமண காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை தரும் . பெரும்பாலான குடும்பங்கள் திருமண செலவுகளுக்கு கடன் தான் வாங்குகின்றன அல்லது வாழ்நாள் சேமிப்பை எடுத்து கரைகின்றன.
சராசரியாக ஒரு குடும்பம் திருமண செலவுக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்குவதாக சொல்லப்படுகிறது. எனவே திருமணத்தை காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சுமார் 7 ஆயிரம் ரூபாய்க்கு திருமண காப்பீடு பிரிமியம் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். 55 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 1 கோடி ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக திடீரென திருமணம் நின்று ரத்தாவது அல்லது திருமணம் நடைபெறும் இடத்தில் ஏதேனும் விபத்து நேர் இருக்கிறது அல்லது தனிப்பட்ட முறையில் விபத்து நிகழ்கிறது மணமக்கள் அல்லது அவர் தம் பெற்றோருக்கு மருத்துவ அவசர நிலை ஏற்படுவது, மண்டபத்தில் இருக்கக்கூடிய பொருட்கள் சேதமடைவது, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போகிறது என்பன உள்ளிட்ட சமயங்களில் இந்த திருமண காப்பீடு நமக்கு பெரிய உதவியாக இருக்கும்.
நாம் திருமணம் நடத்தக்கூடிய இடம் , நம்முடைய திருமண பட்ஜெட் ஆகியவற்றை பொறுத்து இந்த பிரிமியம் தொகை என்பது மாறுபடும். இந்த திருமண காப்பீடு திட்டங்களிலும் சில விதிமுறைகளையும் நிறுவனங்கள் நியமிக்கின்றன. எனவே காப்பீடு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது .
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications