நாம் தற்போது நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். விஞ்ஞான வளர்ச்சியால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கலாசாரத்தைப் பற்றி இணையம் வழியாக நொடிப் பொழுதில் அறிந்து கொள்கிறோம். அப்படி ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தானில் மணமகளின் குடும்பத்தினரால் பாரம்பரியமாக வழங்கப்படும் வரதட்சணையாக ரூ.1.51 கோடி, தங்கம், வெள்ளி & நிலங்கள்.இந்த சம்பவம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் நகரில் ஹனுமான் பாக் பகுதியில் வசித்து வருவபர் ரம்பக்ஸ் கோஜா என்பவர்.ரம்பக்ஸ் கோஜாவுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது இரண்டு மகன்கள் அரசு ஆசிரியர்கள், மூன்றாவது மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.ரம்பக்ஸ் கோஜா தனது ஒரே மகளான பிரஜயாவுக்கு ஃபர்தோட் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியரான மதன்லாலை திருமணம் செய்து வைத்தார்.திருமணம் என்பது ஒரு நம்பிக்கையின் தொடக்கம் வாழ்க்கையின் அழகான ஆரம்பம் திருமணம் தான்.

ராம்பக்ஷ் தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் மொத்தம் 2,000 பேர் தனது மகளின் வீட்டிற்கு வந்தனர்.ஒரு குறிப்பிட்ட ராஜஸ்தானி கலாச்சாரத்தில், மணமகளின் குடும்பத்தினரால் பாரம்பரியமாக வழங்கப்படும் வரதட்சணை, தாய்வழி மாமாவால் வழங்கப்படுகிறது.ஜெயலின் கின்யாலா மன்னர் காலத்தில் இருந்தே நாகௌரில் 'மைரா' வழக்கம் புகழ்பெற்றது. இந்திய திருமணங்களில் உள்ள பெரும்பாலான பழக்கவழக்கங்களைப் போலவே, மைரா விழாவும் கூட ஒரு ஆழமான சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
மூன்று சகோதரர்களும் ஒன்றுபட்டு தங்கள் சகோதரி பிரஜயாவுக்கு துப்பட்டா போர்த்தி 'மைரா' விழாவைத் தொடங்கி வைத்தனர். 'மைரா'வின் போது, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் ரொக்கம், 30 தோலா தங்கம், ஐந்து கிலோகிராம் வெள்ளி மற்றும் நாகௌர் நகரில் இரண்டு நிலங்கள் ஆகியவை அவர்களின் சகோதரிக்கு பரிசாக வழங்கப்பட்டன.
ஆனால், இந்த சம்பவத்தில் திருமணம் ஒரு வித்தியாசமான வியாபாரமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பெண்ணை கொடுப்பவரே செல்வங்களையும் கொடுக்கின்றனர். இதனால், மணமகன் அதை வைத்து கொண்டு சம்பாதிக்கும் எண்ணத்தை மறந்துவிடுவார். அதேபோல், இருப்பவர்களுக்கு ஒன்று இல்லாதவர்களுக்கு ஒன்று என்பதுபோல் ஆகிவிடும். இதனாலே இதனால் பல பிரச்சனைகளும் வந்துள்ளன. ஆகையால் வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றமே
இந்தியாவில், 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடைச் சட்டம், திருமணத்தின் போது வரதட்சணை கொடுப்பது, கேட்பது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. மேலும், வரதட்சணை கொடுக்கவோ அல்லது வாங்கவோ ஒப்புக்கொள்வதும் சட்டவிரோதமானது என்று சட்டம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications