இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குச் சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அடுத்த 3 மாதங்களுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தங்களை உரிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கும் என்று தெரிவித்தார். இந்த சாலைப் பணிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என்ற கூறப்பட்டாலும் ஒப்பந்தம் அளிக்கப்பட்ட பின்பு தான் எந்த மாநிலத்திற்கு எந்த திட்டம் கிடைத்துள்ளது என்பது தெரிய வரும்.
மேலும் நடப்பு நிதியாண்டில் சாலை விரிவாக்கத் திட்டம் இதுவரை மெதுவாகத் தொடங்கினாலும் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கி நடப்பு நிதியாண்டில் முடிவடையும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உற்பத்திக்காக முதலீடு செய்து வரும் வேளையில் சாலை போக்கவரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாக உள்ளது. சாலை மேம்பாடுகள் மூலம் சரக்குகளை விரைவாகக் கொண்டு சேர்க்கப்படுவதோடு, பல வகையில் செலவுகளையும் குறைக்க வழிவகுக்கிறது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் "பொதுத் தேர்தல் மற்றும் தேர்தல் விதிகள் காரணமாக, சாலை திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்கும் வேகம் குறைவாக இருந்தது. ஆனால் இனி அப்படியிருக்காது வேகம் அதிகரிக்கப்படும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் அடுத்த மூன்று மாதங்களுக்குள், நாங்கள் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான சாலை ஒப்பந்தங்களை வழங்க உள்ளோம், மார்ச் 2025-க்குள் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தங்களை வழங்குவதே எங்கள் இலக்கு," என்று தெரிவித்துள்ளார்.
இந்தியக் கட்டுமான உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் வியாழக்கிழமை நடத்திய வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி இதை அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் "எங்களிடம் ஏற்கனவே பைப்லைனில் நிறையத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன, பணமும் ஒரு பிரச்சனை இல்லை," என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
"தற்போது நாடு முழுவதும் இருக்கும் சுங்க சாவடிகள் மூலம் கிடைக்கும் கட்டண வருமானம் ரூ.45,000 கோடி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது ரூ.1,40,000 கோடியாக உயரும். மத்திய அரசு பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள, நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள சாலை சொத்துக்களைத் தேர்வு செய்து கூடுதல் வருமானம் ஈட்டும் முயற்சியில் இறக்கியுள்ளோம். எனவே நிதி ஆதாரத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
தேசிய நெடுஞ்சாலை துறை (NHAI) இதுவரை நடப்பு நிதியாண்டில் 47.04 கிமீ மூன்று திட்டங்களை வழங்கியுள்ளது, இதேபோல் ஜூன் மாதம் வரை அமைச்சகத்தால் 95 கிமீ நீளம் கொண்ட சாலைக்குக் கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கட்டுமான உபகரணத் தொழிலுக்கு அரசாங்கத்தின் அனைத்து ஆதரவையும் கட்கரி உறுதியளித்தார், இத்துறை குறித்து பேசுகையில் "சுங்க வரி மற்றும் பிற விஷயங்களில் உங்களுக்கு சில பிரச்சனைகள் இருப்பதை நான் அறிவேன். உங்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்."என்று அவர் கூறினார்.
இந்தியாவின் கட்டுமான உபகரண சந்தையின் மதிப்பு ரூ.79,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இத்தொழில்துறையின் மொத்த தொழிற்சாலை எண்ணிக்கை 1.35 லட்சம் யூனிட்டுகளாக உள்ளது, இது 2030ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications