தமிழ்நாடு அரசு சாலை வரி உயர்த்துவது குறித்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் புதிய வாகனங்களின் விற்பனை குறையுமா என்ற அச்சம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு எழுந்துள்ளது.
மாநிலத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவிலான வரி வருமானம் புதிய வாகனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் சாலை வரி வாயிலாக தமிழ்நாடு அரசு மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் வசூலிக்கிறது. அப்படி தென்னிந்திய மாநிலத்தில் சாலை வரி எப்படி இருக்கு..? தமிழ்நாட்டின் புதிய சாலை வரி அதிகமா..? என்பதை ஒப்பிட்டு பார்க்க போகிறோம்.
புதிய வரி விதிப்பு குறித்து வெளியான தகவல் படி 5 லட்சம் ரூபாய் வரையிலான கார்களுக்கான சாலை வரி 12 சதவீதம், 10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீத வரி. முன்பு 10 லட்சம் ரூபாய் வரையிலான கார்களுக்கு 10 சதவீதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

5 லட்சம் வரையிலான கார்களுக்கு தமிழ்நாட்டின் புதிய வரி உடன் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாரஷ்டிரா மாநிலத்தில் சாலை வரி உடன் ஒப்பிட்டு பார்ப்போம்.
கேரளா - 9 சதவீதம்
ஆந்திர பிரதேசம் - 12 சதவீதம்
தெலுங்கானா - 12 சதவீதம்
கர்நாடகா - 13 சதவீதம்
மகாராஷ்டிரா - 13 சதவீதம்
தமிழ்நாடு - 12 சதவீதம்
5- 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு
கேரளா - 11 சதவீதம்
ஆந்திர பிரதேசம் - 14 சதவீதம்
தெலுங்கானா - 14 சதவீதம்
கர்நாடகா - 14 சதவீதம்
மகாராஷ்டிரா - 13 சதவீதம்
தமிழ்நாடு - 13 சதவீதம்
10 - 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்களுக்கான சாலை வரி
கேரளா - 13 சதவீதம்
ஆந்திர பிரதேசம் - 14சதவீதம்
தெலுங்கானா - 14 சதவீதம்
கர்நாடகா - 17 சதவீதம்
மகாராஷ்டிரா - 14 சதவீதம்
தமிழ்நாடு - 15 சதவீதம்
15 - 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்களுக்கான சாலை வரி
கேரளா - 16 சதவீதம்
ஆந்திர பிரதேசம் - 14 சதவீதம்
தெலுங்கானா - 14 சதவீதம்
கர்நாடகா - 17 சதவீதம்
மகாராஷ்டிரா - 14 சதவீதம்
தமிழ்நாடு - 15 சதவீதம்
20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடைய கார்களுக்கான சாலை வரி
கேரளா - 21 சதவீதம்
ஆந்திர பிரதேசம் - 14 சதவீதம்
தெலுங்கானா - 14 சதவீதம்
கர்நாடகா - 18 சதவீதம்
மகாராஷ்டிரா - 15 சதவீதம்
தமிழ்நாடு - 20 சதவீதம்
1 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கான சாலை வரி
கேரளா - 10 சதவீதம்
ஆந்திர பிரதேசம் - 9 சதவீதம்
தெலுங்கானா - 9 சதவீதம்
கர்நாடகா - 18 சதவீதம்
தமிழ்நாடு - 10 சதவீதம்
1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கான சாலை வரி
கேரளா - 12 சதவீதம்
ஆந்திர பிரதேசம் - 9 சதவீதம்
தெலுங்கானா - 9 சதவீதம்
கர்நாடகா - 18 சதவீதம்
தமிழ்நாடு - 12 சதவீதம்
2 லட்சம் ரூபாய் மேல் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு கேரளாவில் 21 சதவீதம் சாலை வரி விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான சாலை வரி 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடைசியாக திருத்தப்பட்டது. இதன் பின்பு கார்களுக்கான சாலை வரி 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு எவ்விதமான மாற்றமும் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது திருத்தப்பட்டு உள்ளது.
2022-2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு போக்குவரத்து துறையின் வருடாந்திர வருவாய் சுமார் 6,674.29 கோடி ரூபாயாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் தான். தற்போது உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள புதிய வரி உயர்வின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications