Roadster X: கிருஷ்ணகிரி-யில் பெண் ஊழியர்களை வைத்து புரட்சி செய்யும் OLA.. எலக்ட்ரிக் பைக் விலை என்ன?

இந்தியாவின் எலக்டிரிக் வாகன புரட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம். தமிழ்நாட்டின் MSME களஞ்சியமான ஓசூர் அமைந்திருக்கு்ம கிருஷ்ணகிரியில் ஓலா எலக்ட்ரிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஒரு தனி சிறப்பு கொண்டது, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ஆட்டோமொபைல் தொழிற்சாலை அதிகப்படியான பெண்களை கொண்டு இயங்கி வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விற்பனையிலும், தயாரிப்பிலும் பல சாதனைகளை படைத்திருக்கும் வேளையில் கிருஷ்ணகிரி ஃபியூச்சர் ஃபேக்டரியில் இருந்து முதல் ரோட்ஸ்டர் X மோட்டார் சைக்கிள் வெற்றிகரமாக உற்பத்தி செய்து வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எலக்டிரிக் வாகன சந்தையில் ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Roadster X: கிருஷ்ணகிரி-யில் பெண் ஊழியர்களை வைத்து புரட்சி செய்யும் OLA.. எலக்ட்ரிக் பைக் விலை என்ன?

இதுவரையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், முதல் முறையாக ரோட்ஸ்டர் X என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் தயாரித்துள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் முழுமையாக தயாரிக்கப்பட்ட வாகனத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரோட்ஸ்டர் X மோட்டார் சைக்கிள்கள் இந்திய சாலைகளில் பயணிக்க தயாராக உள்ளன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுவதும் டெலிவரி செய்ய தீவிரமாக தயாராகி வருகிறது. ஃபியூச்சர் ஃபேக்டரியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் முக்கியமான பாகங்களை தயாரிப்பதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான எலக்ட்ரிக் வாகன ஹப் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

"ரோட்ஸ்டர் X சீரிஸ், ஓலாவின் எலக்டிரிக் வாகன புரட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இன்று அறிமுகம் செய்துள்ள எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஒரு புதிய தயாரிப்பை மட்டுமல்ல, எங்கள் நிறுவனத்திற்கான புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக கருதுகிறோம்." என்று ஓலா எலக்ட்ரிக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவிஷ் அகர்வால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரோட்ஸ்டர் X சீரிஸின் விலைகள்: 2.5kWh ரோட்ஸ்டர் X - ரூ.84,999, 3.5kWh ரோட்ஸ்டர் X - ரூ.94,999, மற்றும் 4.5kWh ரோட்ஸ்டர் X - ரூ.1,04,999. 4.5kWh ரோட்ஸ்டர் X+ - ரூ.1,14,999, மற்றும் 501 கிமீ/சார்ஜ் தூரம் வழங்கும் 9.1kWh ரோட்ஸ்டர் X+ (4680 பாரத் செல் உடன்) - ரூ.1,84,999.

Roadster X: கிருஷ்ணகிரி-யில் பெண் ஊழியர்களை வைத்து புரட்சி செய்யும் OLA.. எலக்ட்ரிக் பைக் விலை என்ன?

இந்த வெளியீடு, தமிழ்நாட்டின் உற்பத்தி திறனையும், எலக்டிரிக் வாகன துறையில் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ரோட்ஸ்டர் X மோட்டார் சைக்கிள், இந்திய சந்தையில் எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய அறிமுகம், தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும். இது தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் மாநிலத்தின் தொழில் திறனை மேம்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+