அங்க சுத்தி இங்க சுத்தி இந்தியாவிலும் கை வைத்த ஏஐ..!! கணினிகளை ஹேக் செய்தது அம்பலம்..!!

ஏஐ அமைப்புகள் மற்றும் ஏஐ ஏஜெண்டுகள் அண்மை காலமாக தங்களூக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை தாண்டி பல்வேறு நாடுகளின் கணினிகளுள் நுழைந்து ஹேக் செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவின் கணினி அமைப்புகளுக்குள்ளும் அனுமதி இல்லாமல் நுழைந்து ஏஐ ஏஜெண்டுகள் தகவல்களை திரட்டி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவனங்களின் ரகசிய தரவுகள் மற்றும் கம்ப்யூட்டர் அமைப்புகளுக்குள் ஏஐ மாடலகள் மற்றும் ஏஜென்ட்டுகள் அனுமதியின்றி ஊடுருவியுள்ளதாக இந்தியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு முகமையான Cert-In (Indian Computer Emergency Response Team) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அங்க சுத்தி இங்க சுத்தி இந்தியாவிலும் கை வைத்த ஏஐ..!! கணினிகளை ஹேக் செய்தது அம்பலம்..!!

சில செயற்கை நுண்ணறிவு மாடல் சேவை வழங்குநர்கள் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தங்களின் அதிநவீன ஏஐ மாடல்களும் ஏஜென்ட்டுகளும் இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களின் நேரடி அமைப்புகளுக்குள் நுழைந்துவிட்டதை தாமாக முன்வந்து Cert-In அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏஐ ஏஜென்ட்டுகள் நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் ரகசிய வணிக ஆவணங்களை படித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் விஷயம் , ஏஐ மாடல்களும் ஏஜென்டுகளும் தங்கள் அமைப்புகளுக்குள் நுழைந்து தரவுகளை படித்ததை, பாதிக்கப்பட்ட எந்தவொரு இந்திய நிறுவனத்தாலும் ஆரம்பத்தில் கண்டறியவே முடியவில்லை என்பது தான்.

Also Read

ஒதுக்கப்பட்ட பணிகளுக்கான வரம்புகளை தாண்டி இந்த ஏஐ ஏஜென்ட்டுகள் செயல்பட்டதை, அந்த ஏஐ நிறுவனங்களே தாமாக முன்வந்து வெளிப்படுத்திய பின்னர்தான் இந்த விவரமே வெளிச்சத்திற்கு வந்தது. சைபர் பாதுகாப்பு முகமையான Cert-In மனித ஹேக்கர்களை விட மிகவும் வேகமாக இந்த ஏஐ ஏஜென்ட்டுகள் ஹேக்கிங் செய்துள்ளன என கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் எதிர்கொண்ட பாதுகாப்பு குறைபாடுகளை முழுமையாகச் சரிசெய்ய தவறியபோது, அவை மீண்டும் இன்னும் பெரிய அளவில் தாக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது.

ரெடி-மேடு ஊடுருவும் திறன்களை கொண்ட ஏஐ ஏஜென்ட்டுகளை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களுக்கு எதிராக நிதி நோக்கம் கொண்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரே நேரத்தில் பல ஏஜென்ட் நடவடிக்கைகளை இணையாக இயக்கி சிலர் இந்த வேலையை பார்த்துள்ளனர் என்றும் எச்சரித்துள்ளது.

Recommended For You

இந்திய நிறுவனங்கள் தங்கள் இணைய பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள சிறு ஓட்டைகளை கூட தீவிரமாக கவனிக்க வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபுறம் வரப்பிரசாதமாக இருந்தாலும், அதன் முறையற்ற அல்லது பாதுகாப்பற்ற பயன்பாடு இந்திய நிறுவனங்களின் தரவு பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல உலக நாடுகளுக்கான பிரச்சினை.

அண்மையில் ஆஸ்திரேலியா அரசின் இணையதளங்களுக்குள் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மாடல்கள் நுழைந்து ஹேக்கிங் செய்ததை அந்நாட்டு பிரதமர் அறிவித்து கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+