மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் ஹிட் மேன் என செல்லமாக அழைக்கப்படும் ரோகித் சர்மாவின் பிறந்தநாள் இன்று. ரோஹித் சர்மா என்ற உடனே கிரிக்கெட் உலகில் அவரது சாதனைகள் எந்த அளவுக்கு நினைவுக்கு வருகிறதோ அவரது மும்பை குடியிருப்பும் அந்த அளவுக்கு நினைவுக்கு வரும். ஏனெனில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸானது ரோகித் சர்மாவின் மும்பை வீடு..
ரோகித் சர்மாவின் குடும்பம் மும்பையின் புகழ்பெற்ற அடுக்குமாடி தளமான அஹுஜா டவர்ஸில் உள்ளது. அரபிக் கடலை காணும் வகையில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது அஹூஜா டவர்ஸ். மொத்தம் 53 அடுக்குகள் கொண்ட இந்த கட்டடத்தில் ரோகித்தின் வீடு 29 ஆவது தளத்தில் உள்ளது. அரபிக் கடலின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ரித்திகா சஜ்தேவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற கையோடு ரோகித் சர்மா அஹூஜா டவர்ஸில் வீட்டை வாங்கினார். 6 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள ரோகித் சர்மாவின் இந்த வீட்டின் மதிப்பு 30 கோடி ரூபாயாகும். 4 படுக்கையறைகள் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட குடியிருப்பாக இது இருக்கிறது. முக்கியமாக, வீட்டிலிருந்து 270 டிகிரி வியூ பாயிண்ட்டில் நாம் கடலின் அழகை கண்டு ரசிக்கலாம்.
ரோகித் சர்மாவின் வீட்டில் பிரம்மாண்டமான ஒரு பால்கனி இருக்கிறது. ரோகித் சர்மா குறித்த பிரமோஷனல் வீடியோக்களில் இந்த பால்கனி காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். ஏனெனில் இங்குதான் அவர் உடற்பயிற்சி செய்வார். ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோக்களில நாம் அதிகமாக இந்த பால்கனியை காண முடியும்.
வீடு மட்டுமில்லாமல் தனது அலுவல் பணிகளுக்காக தனி இடம் , வீட்டின் அருகிலேயே பயிற்சிக்கான மையம் ஆகியவற்றை கொண்டுள்ளார்.
அஹூஜா டவர்ஸ் உலகின் மிகச்சிறந்த 50 அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று என பெயர் பெற்றது. குறிப்பாக இந்த கட்டடம் அதன் வடிவமைப்பு மற்றும் கட்டட கலைக்கு பெயர் போனது. நியூயார்க்கை சேர்ந்த வில்சன் அசோசியேட்ஸ் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த பி & டி குரூப் ஆகியவை இணைந்து இந்த கட்டடத்தை வடிவமைத்தன.
தன்னுடைய கட்டட பாணிக்காகவே அஹூஜா டவர்ஸ் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது. நீச்சல் குளம், மினி தியேட்டர், ஸ்கை கேஃபே போன்ற பல்வேறு வசதிகள் கொண்டது அஹூஜா டவர்ஸ். இதில் நமது கேப்டன் ரோகித் சர்மா வசிப்பது மற்றொரு சிறப்பு.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications