வறுமையிலிருந்து உருவான Rolex-ன் கதை.. அடேங்கப்பா..!!

உலகின் பிரபலமான கடிகாரங்கள் பிராண்டுகளில், மக்களால் அதிகம் விரும்பப்படும் வாட்ச் பிராண்ட் என்றால் அது ரோலக்ஸ் வாட்ச் தான். ரோலக்ஸ் என்றதும் நம் கண்முன்னே வருவது அதன் விலை மற்றும் தனித்துவமுமான டிசைனும் தான்.

அதை உருவாக்குவது அவ்வளவு சதாரணமில்லை, ஆனால் அதை உருவாக்கியவர் ஒரு சாதரணமானவர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.

ஆம் ரோலக்ஸ் கடிகாரத்தை உருவாக்கியவரின் வாழ்க்கை அவ்வளவு சாதரணமானதாக இல்லை.

 ரோலக்ஸ் உருவான கதை!

ரோலக்ஸ் உருவான கதை!

சுவர்சர்லாந்தில் ரோலக்ஸ் வாட்ச் தயாரிக்கப்பட்டாலும், உண்மையில் அது லண்டனில் உருவானது. ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் (Hans Wilsdorf) மற்றும் ஆல்ஃபிரட் டேவிஸ் (Alfred Davis) இருவரும் இணைந்து தான் முதன் முதலில் ரோலக்ஸ் கடிகாரத்தை உருவாக்கினார்கள்.

 பாக்கெட் கடிகாரம்

பாக்கெட் கடிகாரம்

ஆனால் முதலில் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் மற்றும் ஆல்ஃபிரட் டேவிஸ் ஆகியோர் பாக்கெட் கடிகாரத்தை அறிமுகப்படுத்தினர். அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே அவர்களின் பிராண்ட் இங்கிலாந்து முழுவதும் பிரபலமாக பெறத் தொடங்கியது.

 ரோலக்ஸின் ஓனர்!

ரோலக்ஸின் ஓனர்!

ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் மார்ச் 22, 1881 ஆம் ஆண்டு ஜெர்மனின் குல்ம்பாக்கில் பிறந்தார். தந்தை டேனியல் ஃபெர்டினாண்ட் வில்ஸ்டோர்ஃப் ( Daniel Ferdinand Wilsdorf ) ஒரு வன்பொருள் கடையின் உரிமையாளராக இருந்தார்.

 இளம் வயதில் பெற்றோர் இழப்பு

இளம் வயதில் பெற்றோர் இழப்பு

ஹான்ஸ் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அதன்பின் சிறுவயதிலியே வறுமைக்குத் தள்ளப்பட்டு, பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார். ஹான்ஸ் அவர்களின் மாமாக்கள் உதவியுடன் அவரின் கல்வியை முடித்துள்ளார். அதன் பின் சுவட்சர்லாந்துக்குச் சென்று அங்குள்ள முத்து வியாபாரி ஒருவரிடம் பணிபுரிந்தார்.

 ரோலக்ஸின் தொடக்கம்!

ரோலக்ஸின் தொடக்கம்!

1903 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற ஹான்ஸ் அங்கு திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் அங்கு அவர் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்த காரணத்தால், அவர் அங்குள்ள ஒரு வாட்ச் கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார்.

அப்பொழுதுதான் ஹான்ஸிற்கு கைக்கடிகாரத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் அப்பொழுது அவரிடம் அவர் நினைத்த கைக்கடிகாரத்தை தயாரிக்க போதுமான பணம் இல்லை.

 ஆல்ஃபிரட் டேவிட்

ஆல்ஃபிரட் டேவிட்

அதன்பின் ஆல்ஃபிரட் டேவிட்டை சந்தித்து, ஹான்ஸின் ஐடியாக்களை அவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆல்ஃபிரட், ஹான்ஸ் திட்டங்களில் முதலீடு செய்ய முடிவு செய்தார்.

அதனையடுத்து ரோலக்ஸ் கைக்கடிகாரம் உருவாக்கப்பட்டு அது அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது. அதன் தரமும் உயர்ந்து, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 உலகப்போரும் - ரோலக்ஸின் வளர்ச்சியும்!

உலகப்போரும் - ரோலக்ஸின் வளர்ச்சியும்!

முதலாம் உலகப் போரின் போது, வீரர்கள் மிகவும் வசதியான ரோலக்ஸ் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். அதன் பின் ரோலக்ஸ் தயாரிப்புகள் 20 ஆம் நூற்றாண்டில் உலக அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

 பிராண்ட் பெயர்

பிராண்ட் பெயர்

ரோல்க்ஸ் பிராண்ட் துவங்கி சிறிது காலம் கழித்து ஹான்ஸ் பிராண்டின் பெயரை மாற்ற முடிவு செய்தார். அந்த பெயர் மக்கள் உச்சரிக்க எளிதானதாகவும் மற்றும் நினைவில் வைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டி 'ரோலக்ஸ்' என்ற வார்த்தையை அவரே உருவாக்கி, அதை பிராண்டின் பெயராகவும் வைத்தார். ரோலஸ்க் என்ற வார்த்தைக்கு எவ்வித அர்த்தமும், விளக்கமும் இல்லை.

 ரோலக்ஸ் வளர்ச்சி!

ரோலக்ஸ் வளர்ச்சி!

இந்நிறுவனம் 1908 ஆம் ஆண்டில் ரோலெக்ஸை அதன் கைக்கடிகாரங்களின் பிராண்ட் பெயராக பதிவு செய்து 1915 இல் ரோலக்ஸ் வாட்ச் கோ நிறுவனமாக மாறியது.

 முதல் உலகப் போர்

முதல் உலகப் போர்

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, போருக்குப் பிந்தைய காலகட்டங்களில் பிரிட்டனில் சாதகமற்ற பொருளாதார நிலைமை காரணமாக நிறுவனம் அதன் செயல்பாட்டு தளத்தை ஜெனீவாவுக்கு மாற்றியது, 1920 இல் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் ஜெனீவாவில் மாண்ட்ரெஸ் ரோலக்ஸ் எஸ்.ஏ.வை புதிய நிறுவனத்தின் பெயராக பதிவு செய்தார்.

 முன்னணி பிராண்டுகள்

முன்னணி பிராண்டுகள்

அதனைத் தொடர்ந்து ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல், சீ ட்வெல்லர், சப்மரைனர் மற்றும் டேட்ஜஸ்ட் போன்ற சின்னச் சின்ன மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்த பிரம்மாண்டமான, தனித்துவமான தயாரிப்புகளும், அதன் அம்சங்களும் ரோலக்ஸை உலகில் அதிகம் விரும்பப்படும் வாட்ச் பிராண்டுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+