ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் அண்மையில் விலை உயர்ந்த மாடல் ஒன்றை வெளியிட்டது. அமேதிஸ்ட் (Amethyst) மற்றும் லா ரோஸ் நொயர் (La Rose Noire) கார்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ரோல்ஸ் ராய்ஸ் அதன் சுமார் ரூ. 257 கோடி மதிப்பிலான கோச்பில்ட் ரோட்ஸ்டரின் மூன்றாவது மாடலை வெளியிட்டது, இது ஆர்கேடியா டிராப்டெய்ல் (Arcadia Droptail) என அழைக்கப்படுகிறது.
இதன் விலை உலகின் மிக விலையுயர்ந்த காராக இதை உயத்தியுள்ளது. இந்த கஸ்டமைஸ்டு காரின் பெயர் அதன் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் உயர்தர அம்சங்களால் சூடப்பட்டுள்ளது.

ஆர்காடியா எனும் கிரேக்க நகரின் நினைவாக இப்பெயர் இடப்பட்டுள்ளது. ஆர்காடியா என்றால் "பூமியில் சொர்க்கம்" என்று பொருள்படும். சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் இந்த காரின் அறிமுக விழா நடந்தது.
வாகனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்-
233 சாண்டோஸ் கிரெய்ன் ரோஸ்வுட் மரத்தின் துண்டுகள், அவற்றில் 76 பின்புற டெக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயன்படுத்தப்படும் அனைத்து மர வகைகளிலும் இது சிறந்ததாகும்.
காரின் இன்டீரியரை அலங்கரிக்க 8000 மணி நேரம் ஆனது.
ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா, டேன் றும் வெள்ளை நிற தோலை வைத்து ஐந்து மாதங்கள் செலவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மெட்டாலிக் பாடி ஜியோமெட்ரிக் கில்லோச் வடிவத்தில் 119 முகங்களைக் கொண்டுள்ளது.
ஆர்கேடியா டிராப்டெயிலுக்காக, ரோல்ஸ் ராய்ஸ் கோச்பில்ட் வடிவமைப்பாளர்கள் இயற்கையான டியோடோன் நிறத்தை உருவாக்கினர். பிரைமரி பாடி கலர் அலுமினியத் துகள்கள் உட்செலுத்தப்பட்ட அழுத்தமான வெள்ளை ஆகும்.
ரோல்ஸ் ராய்ஸ் வல்லுனர்கள் பெரிய அளவு அலுமினியத் துகள்களைப் பயன்படுத்தி கவர்ச்சிகரமான மெட்டாலிக் ஃபினிஷிங்கைக் கொடுத்துள்ளனர்.
இரண்டு இருக்கைகள் கொண்ட ரோட்ஸ்டர் பிரபலமான 6.75-லிட்டர் V12 ட்வின்-டர்போ எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது கூடுதலாக 30 குதிரைத்திறனை உருவாக்க டியூன் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 601 குதிரைத்திறன் மற்றும் 841 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது.
ஆர்காடியா டிராப்-டெயில் ரோல்ஸ் ராய்ஸின் மதிப்புக்குரிய பரம்பரையில் சமீபத்திய சேர்க்கை ஆகும். இது கலாசாரம், கலை, பொறியியல் தேர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணத்து தயாரிக்கப்பட்ட சொகுசு கார் ஆகும்.
இந்தக் கார் நிகரற்ற ஓட்டுநர் அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வாகன வடிவமைப்பின் இணையற்ற சாதனையையும் பிரதிபலிக்கிறது.
Story Written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications