கார் மற்றும் விமான இன்ஜின் தயாரிப்பு உலகின் மன்னன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ம் முக்கியத் திட்டத்திற்கு ஒன்றிணைந்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது இன்ஜினியரிங் சென்டரில் பெரும் பகுதியை சிவில் ஏரோஸ்பேஸ் சேவைக்காக மாற்றிய அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இக்கூட்டணி ஒப்பந்தம் மூலம் இன்போசிஸ் இந்த மாற்றத்திற்கு ஹெய் டெக் இன்ஜினியரிங் சேவை மற்றும் R&D சேவைகள் உடன் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவைகளை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்க உள்ளது.

இதுகுறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசியச் சந்தை தலைவர் கிஷோர் ஜெயராமன் கூறுகையில், இன்போசிஸ் ரோல்ஸ் ராய் நிறுவனத்திற்கு நீண்ட காலக் கூட்டணியில் உள்ளது. தற்போது செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் இன்ஜினியரிங் சேவையில் பெரிய அளவிலான மாற்றத்தைச் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உலகில் சுமார் 150 நாடுகளில் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. மேலும் சுமார் 400 விமானம் மற்றும் குத்தகை வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
2019ல் மட்டும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சுமார் 1.46 பில்லியன் பவுண்ட் தொகையை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டத்திற்காக மட்டுமே முதலீடு செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் வர்த்தகம் முடியும் நேரத்தில் 0.36 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 1,142 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 1,234 ரூபாய்க்குத் துவங்கிப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த இன்போசிஸ் பங்குகள் வர்த்தக முடிவில் கணிசமான உயர்வை அடைந்தது.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications