உலகின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 2022 ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது. பொதுவாக ஆடம்பர கார்களின் விற்பனை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இதன் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் அதிகப்படியான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சுமார் 6021 கார்களை விற்றது வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 118 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகப்படியான விற்பனை எண்ணிக்கை என அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பின்பு ஆடம்பர சந்தை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், அதிக வர்த்தகத்தைப் பதிவு செய்த டம்பர பிராண்டுகளில் ரோல்ஸ் ராய்ஸ்-ம் இணைந்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 118 ஆண்டுக் கால வரலாற்றில் பெரும் பணக்காரர்கள், பிரபலங்களை முக்கிய வாடிக்கையாளராகக் கொண்டு உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகளில் விமான இன்ஜின்களும் உள்ளது. இதே 2022 ஆம் ஆண்டிலும் பிரைவேட் ஜெட் விற்பனை அதிகரித்துள்ளது.
பிரைவேட் ஜெட்
இதற்கு ஏற்றார் போல் பிரைவேட் ஜெட் வைத்துள்ளவர்கள் தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக உள்ளனர். இந்த நிலையில் தான் 2022 ஆம் ஆண்டில் அதிகக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
பெஸ்போ கமிஷன்கள்
2022 ஆம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் அதிக மதிப்புள்ள தனிப்பயனாக்கம் (high-value personalisation) மற்றும் கஸ்டம் அம்சங்களுக்கான வலுவான தேவை இருந்த காரணத்தால் பெஸ்போ கமிஷன்கள் அளவீட்டில் மிகப் பெரிய உயர்வை கண்டு உள்ளது
எலக்ட்ரிக் கார்
இது மட்டும் அல்லாமல் பிற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போல் ரோல்ஸ் ராய்ஸ்-ம் எலக்ட்ரிக் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்து, இந்தக் காரின் பெயர் ஸ்பெக்டர் எனவும் அறிவித்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் முழு எலக்ட்ரிக் கார் ஸ்பெக்டருக்கான முன்கூட்டிய ஆர்டர் எண்ணிக்கை கணித்ததைக் காட்டிலும் எதிர்பார்க்காத வரவேற்பை பெற்று அதிக ஆர்டர்களைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கான ஆர்டர் புத்தகம் 2023 வரை புல் ஆகியுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
2022 ஆம் ஆண்டில் குல்லினன் கார் தான் மிகவும் டிமாண்ட் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆக உள்ளது. அதே நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் கார் தான் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடலாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு, ஆசியா-பசிபிக், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ரோல்ஸ் ராய்ஸ் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அமெரிக்கா
ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் மிகப்பெரிய சந்தையாக இருப்பது அமெரிக்கா தான். அமெரிக்காவில் தற்போது இளைய தலைமுறை மக்கள் முதல் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குவதில் அதிகப்படியான ஆர்வம் காட்டுவதால், இப்பகுதியில் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சீனா
அமெரிக்கா-வை கொடர்ந்து ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் கிரேட்டர் சீனா இரண்டாவது பெரிய சந்தையாகத் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.
சீனா, ஐரோப்பா
சீனாவில் தற்போது நிலவும் நிலையற்ற பொருளாதார வளர்ச்சி காரணமாகச் சீனாவில் விற்பனை அளவு ஒற்றை இலக்க வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் ஐரோப்பாவைப் பாதிக்கும் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை இருந்தபோதிலும், 2022 இல் ஐரோப்பிய சந்தையில் ஒட்டுமொத்தமாக வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications