சில நேரங்களில் அதிர்ஷ்டம் எதிர்பாராத விதமாக கதவைத் தட்டும். அப்படித்தான் ருமேனியாவைச் சேர்ந்த உலோகக் கண்டுபிடிப்பு ஆர்வலருக்கு லக் அடித்துள்ளது. மரியஸ் மான்கேக் என்ற உலோக ஆர்வலர் கடந்த சனிக்கிழமை அன்று லட்கா வெச்சா என்ற கிராமத்திற்கு தனது கண்டுபிடிப்பைத் தொடர சென்றிருக்கிறார். அப்போது அருகில் இருந்த ஒரு வயலை ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த கிராமத்திற்கு மரியஸ் தனியாகத்தான் சென்றிருந்தார். எதிர்பாராத விதமாக வயலில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது, 1469 ரோமானிய வெள்ளி நாணயங்களை கண்டறிந்தார்.
ஃபாக்ஸ் நியூஸிடம் மரியஸ் பேசுகையில், "வழக்கம் போல தனிமையில் உடற்பயிற்சி செய்யவும், இயற்கையின் அமைதியை அனுபவிக்கவும் வயல்வெளிகளுக்கும், காடுகளுக்கும் நான் செல்வது வழக்கம். அன்றைய தினமும் அதற்காக தான் சென்றிருந்தேன். செல்லும்போது கையில் உலோகக் கண்டுபிடிப்பு கருவியை எடுத்துக் கொண்டு தனியாகச் சென்றேன்.

வழக்கமாக எங்கு சென்றாலும் உலோகக் கண்டுபிடிப்பு கருவியை எடுத்துக் கொண்டுதான் செல்வேன். அன்றைய தினம் அழகான சனிக்கிழமை ஓய்வெடுத்து விட்டு, உடற்பயிற்சி செய்து விட்டு வரலாம் என்பதற்காக தனியாகச் சென்றேன். அந்த நாள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்று துளியும் நான் நினைத்துப் பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
ஏனெனில் தனது கண்டுபிடிப்பு கருவியால் நிலத்தை துழாவிக் கொண்டிருக்கும்போது திடீரென அதிலிருந்து சத்தம் கேட்கத் தொடங்கியுள்ளது. மண்ணுக்கு அடியில் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்த மரியஸ் உடனே தோண்டத் தொடங்கியுள்ளார். அப்போது வெள்ளி நாணயங்களைக் கொண்ட ஒரு புதையலைக் கண்டறிந்துள்ளார்.
அதைப் பார்த்ததும் மரியசுக்கு ஒன்றுமே புரியவில்லை. நினைத்துப் பாருங்கள். நீங்கள் தனியாக சென்று கொண்டிருக்கும் போது ஒரு புதையலை காண்கிறீர்கள்.. அப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? அதே நிலைதான் மரியசுக்கும் இருந்தது. அவருக்கு இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியுள்ளது. மரியஸ் கனவு காண்பது போல உணர்ந்துள்ளார்.
நடப்பது அனைத்தும் உண்மையா? தான் கண்டெடுத்திருப்பது உண்மையிலேயே புதையலா? என்பதை தெரிந்து கொள்ள மரியஸ் தனது கைகளை கிள்ளி பார்த்துள்ளார். அவர் கண்டெடுத்த நாணயங்கள் 2000 ஆண்டு பழமையானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் புகைப்படம் எல்லாம் எடுத்த பிறகு, அவற்றை ஒரு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார்.
தனது அனுபவம் குறித்து கூறுகையில், "ஒரு நாள் என்னுடைய குழந்தைகளை எல்லாம் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வேன். நமது மக்களின் வரலாற்றில் ஒரு பகுதியை நான் கண்டெடுத்தேன்! என்று அவர்களுக்கு என்னால் பெருமையுடன் விளக்க முடியும்", என்று மரியஸ் கூறியுள்ளார்.
மரியஸ் கண்டுபிடித்த புதையலின் சரியான மதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இதே போன்ற ரோமானிய வெள்ளி நாணயங்கள் ஒவ்வொன்றும் ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மரியஸ் கண்டுபிடித்த புதையலின் மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளால் ஒரு நாட்டின் கடந்த கால வரலாறு பற்றிய தெளிவான விவரங்கள் இளைய தலைமுறையினருக்கு சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications