இன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பிரபலமான தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள் (Apple). ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் என்ற பெயர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த மூன்றாவது நபர் ரான் வேய்ன் (Ron Wayne) என்பவரைப் பற்றியதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். 1976-ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கப்பட்ட போது ரான் வேய்ன் எனும் மூன்றாவது நிறுவனரும் இதில் 10% பங்குடன் இருந்தார். ஆனால் அவர் மிக விரைவில், வெறும் 12 நாட்களில், தனது பங்குகளை வெறும் 800 டாலருக்கு விற்றுவிட்டு விலகினார்.
மேலும், நிறுவனத்தில் அவருக்கு மீண்டும் உரிமை இருக்காதபடி உறுதி செய்ய, கூடுதலாக 1,500 டாலர் பெற்றுக் கொண்டார். அப்போது ரான் வேய்ன்க்கு 40 வயது. ஏற்கனவே சில வணிகங்களில் நஷ்டத்தை சந்தித்திருந்தார். ஆனால் ஜாப்ஸும் வாஸ்னியாகும் 20-களில் இளம் தொழில்நுட்பக் கற்பனைகளோடு நிரம்பியவர்கள். ரான் வேய்ன் ஒரு பெரிய நிதி பொறுப்பை ஏற்பது மற்றும் கடன் செலுத்த முடியாமல் போவதற்கான அச்சத்தில் இருந்தார். எனவே, எதிர்கால அபாயங்களை தவிர்க்கவே, அவர் வெளியேற முடிவு செய்தார்.

ரான் வேய்ன் விற்ற 10% பங்குகள், இன்றைய மதிப்பீட்டின்படி 300 பில்லியன் டாலர் (3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்) மதிப்புள்ளது. இதை இந்திய ரூபாயில் கணக்கிட்டால், ரூ. 25 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அவர் விற்ற 800 டாலர் இன்று ஒரு மிக மிகச் சிறிய தொகையாகவே தெரிகிறது. ஆனால் அந்த நேரத்தில், அது ஒரு பாதுகாப்பான முடிவாக இருந்தது எனவே அவர் அதை செய்தார்.
இவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்த பின், ஒரு மனிதர் வருந்துவது இயல்பான விஷயம். ஆனால் ரான் வேய்ன் அதற்கு வித்தியாசமானவர். அவர் அளித்த பல பேட்டிகளில் ஒரு விசாரணைக்கு எப்போதும் அதே பதிலைத் தான் கூறுகிறார். அவர் கூறுகையில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் என் நிலையை வைத்து சரியான முடிவை எடுத்தேன் என்றார். அவரது வாழ்க்கை ஒரு பாடமாகவே இருக்கிறது. வெற்றி என்பது எப்போதும் பணத்தின் அளவால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டியதல்ல. மனநிம்மதி, நல்ல உறவுகள், மற்றும் சந்தோஷமான வாழ்க்கை என்பவை அதைவிட மேலானவை ஆகும்.
ரான் வேய்னின் முடிவுகள் காலத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. எப்போது எதைக் கைவிடுவது அல்லது தொடர்வது என்பது, நமக்கு அந்த நேரத்தில் கிடைத்த தகவல்களிலேயே சார்ந்திருக்கும். அனைத்து தவறுகளும் தவறுகள் அல்ல. சில நேரங்களில் நாம் இழந்ததை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த அனுபவங்களே நம்மை கற்றுக்கொள்ள வைக்கும். வெற்றி என்றால் பணம் மட்டுமல்ல. பலருக்குப் பணம் வாழ்க்கையின் இலக்காக இருக்கலாம். ஆனால் அதற்கப்பாற்பட்ட மன அமைதியும் வெற்றி தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications