மும்பை: யூ டிவி (UTV) தலைவரான ரோனி ஸ்க்ரூவாலா பிரபல பாலிவுட் நடிகர்களை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அண்மையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் ,சல்மான் கான் மற்றும் அமீர் கான் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி யூ டிவி நிறுவனத்தின் ரோனி ஸ்க்ரூவாலா முதலிடம் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. ஷாருக்கானின் சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலராகவும், சல்மான்கானின் சொத்து மதிப்பு 390 மில்லியன் டாலராகவும், அமீர் கான் சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலராகவும் உள்ளது.

மூன்று பேரின் சொத்து மதிப்பை சேர்த்தால் கூட 1.38 பில்லியன் டாலர் தான் வருகிறது. அப்போது கூட ரோனியின் சொத்து மதிப்பை எட்ட முடியவில்லை. ரோனி 68 வயதானவர், மும்பையில் பிறந்தவர். இவர் காமர்ஸ் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். இதனை அடுத்து டூத் பிரஷ் தயாரிப்பு தொழில் ஈடுபட்டார். 1980களில் கேபிள் டிவி தொழிலில் கால் பதித்தார்.
1990 இல் யூ டிவி என்ற மீடியா நிறுவனத்தை தொடங்கினார். யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இவர் ஜோதா அக்பர், ரங் தே பசந்தி உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற படங்களை தயாரித்தார். 2012 ஆம் ஆண்டு அவர் யூ டிவி நிறுவனத்தை டிஸ்னிக்கு விற்பனை செய்தார். இதன் மூலம் இவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்தது.
இதனை எடுத்து சில காலம் விலகி இருந்த அவர் 2017 ஆம் ஆண்டு ஆர்எஸ்விபி என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். upGrad என்ற ஒரு ஆன்லைன் கல்வி தளத்தையும் நடத்தி வருகிறார். U Sports என்ற ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஒரு முதலீட்டு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறார். இவ்வாறு பல வழிகளில் இவருக்கான சொத்து மதிப்பு என்பது உயர்ந்திருக்கிறது.
ஷாருக்கானின் சொத்து மதிப்பானது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவருடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஊடக நிறுவனம் மற்றும் கொல்கத்தா அணியின் ஐபிஎல் உரிமம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கிறது. சல்மான் கானுக்கு திரைப்படங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் பணம் கிடைக்கிறது. அமீர்கான் திரைப்படங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications