புதிதாக பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட ரூட் மொபைல் பங்கு விலையானது, இன்று 16.24% ஏற்றம் கண்டு 961 ரூபாயாக காணப்படுகிறது.
இந்த பங்கின் விலையானது நேற்றும் 19% ஏற்றம் கண்டுள்ளது. சரி என்ன காரணம் தொடந்து இரண்டு நாட்களாக இப்படி கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகிறதே?

ரூட் மொபைல் நிறுவனத்தில், கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் தனது பங்குகளை 5.23% உயர்த்தியுள்ளதே இதற்கு காரணம் என கருதப்படுகிறது. இது புதன்கிழமையன்று இந்த பங்குகளை பட்டியலிடப்பட்ட பின்னர் தான், இந்த கிடு கிடு ஏற்றம்.
பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட பின்னர் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 350 ரூபாயாகும். ஆனால் இது ஐபிஓ பங்கு வெளியீட்டை விட 102.28% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பங்கு விலையானது வெளியீட்டு விலைக்கு எதிராக கடந்த மூன்று அமர்வுகளில் இந்த பங்கு 135% திரண்டுள்ளது.
இது பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கோல்டுமேன் சாச்சஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், கூடுதலாக ரூட் மொபைல் நிறுவனத்தில் 3.99 லட்சம் ஈக்விட்டி பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே கடந்த செவ்வாய்கிழமையன்று 24.74 லட்சம் ஈக்விட்டி பங்குகளை கோல்டு மேன் சாச்சஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம், ரூட் மொபைல் நிறுவனத்தில் 5.23% ஆக தனது பங்குகளை உயர்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தான் கடந்த செவ்வாய்கிழமையன்று 692.80 ரூபாயாக முடிவடைந்த, இந்த பங்கின் விலையானது, நேற்று 825.55 ரூபாயாக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றும் 16.24% அதிகரித்து 961 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இதே என்எஸ்இ வர்த்தகத்திலும் இதன் பங்கு விலையானது இன்று 16.94% அதிகரித்து 963.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
கடந்த செப்டம்பர் 9 -11ம் தேதி வரையிலான காலத்தில் ரூட் மொபைல் தனது பங்கு வெளியீடு மூலம் 600 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. இந்த வெளியீட்டில் 240 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 360 கோடி ரூபாய்க்கு மேம்பாட்டாளர் பங்குகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் இந்த நிறுவனம் 345 - 350 ரூபாயாக விலையை நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications