டெல்லி வேணாம், சென்னை தான் வேணும்.. 20 ஆண்டுகளுக்கு பின் வரும் ராயல் புருனே ஏர்லைன்ஸ்..!

சென்னை: ராயல் புருனே ஏர்லைன்ஸ் (BI) 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ராயல் புருனே ஏர்லைன்ஸ் டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு சென்னைக்குத் தனது நேரடி விமான சேவையை துவங்கியுள்ளது.

முன்னதாக, ராயல் புருனே ஏர்லைன்ஸ் 2004 இன் இறுதி வரை கொல்கத்தா (CCU) க்கு விமான சேவைகளை நடத்தியது. ஆனால் அதன் பின்பு பல காரணங்களுக்காக இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்திருந்தது. இதற்கிடையில் கொரோனா தொற்று காலத்தில் புருனே நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சாட்டர்ட் விமான சேவைகளை அளித்து வந்தது.

டெல்லி வேணாம், சென்னை தான் வேணும்.. 20 ஆண்டுகளுக்கு பின் வரும் ராயல் புருனே ஏர்லைன்ஸ்..!

புருனே நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனம் தான் இந்த ராயல் புருனே ஏர்லைன்ஸ், தனது நெட்வொர்க்-ஐ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, புருனே சர்வதேச விமான நிலையத்தில் (BWN) இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA)க்கு நவம்பர் 5, 2024 அன்று முதல் விமான சேவையை தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஒரு ஏர்பஸ் A320 விமானம் வாரத்திற்கு மூன்று முறை இரண்டு நகரங்களுக்கு இடையே பயணிக்க உள்ளது. இந்த ஏர்பஸ் விமானம் புருனே சர்வதேச விமான நிலையத்திலிருந்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8:00 மணிக்கு BI121 என்ற பெயர் கொண்ட விமானத்கிவ் புறப்படும். வியாழக்கிழமைகளில் சென்னையிலிருந்து இரவு 11:50 மணிக்கு BI122 என்ற பெயரில் திரும்பும்.

இதேபோல் BI121 சனிக்கிழமைகளில் காலை 12:30 மணிக்கு BWN இருந்து புறப்படும். இந்த விமானம் காலை 4:20 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்படும்.

இந்த விமானத்தில் 12 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள் மற்றும் 138 எக்னாமிக் இருக்கைகளுடன் உள்ளது. இதில் 32-இன்ச் இருக்கை பிட்ச் கொண்ட 16 விருப்ப இருக்கைகள், 12 கூடுதல் லெக்ரூம் இருக்கைகள் மற்றும் 2 பாசிநெட் இருக்கைகள் உள்ளன.

ராயல் புருனே ஏர்லைன்ஸ் தற்போது 7 ஏர்பஸ் A320neos மற்றும் 5 போயிங் 787-8 களைக் கொண்டுள்ளது. இவை முக்கியமாக ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நகரங்களுக்கு சேவை செய்கின்றன.

ஏர்லைன் சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஏர் ஷோவின் போது தனது விமான சேவையின் நெட்வொர்க்-ஐ விரிவாக்கத்தை ஆதரிக்கவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் நான்கு போயிங் 787-9 விமானங்களை ஆர்டர் செய்தது. இதன் காரணமாகத் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து தனது நெட்வொர்க்கில் சென்னையை இணைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+