ரெட்ரோ லுக், கம்பீரமான சத்தம், சாலைகளில் அதே ராஜநடை. ராயல் என்ஃபீல்டு புல்லட் என்றாலே பலருக்கும் ஒரு தனி க்ரேஸ் தான். இன்றும் பல இளைஞர்களின் கனவு பைக்காக இருக்கும் இந்த புல்லட், 80-களில் ஒரு மிரட்டலான அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது. ஆனால், இன்று லட்சங்களில் எகிறிக் கிடக்கும் அதன் விலை, 39 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வளவு தெரியுமா? என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு பழைய ரசீது, ஒட்டுமொத்த பைக் பிரியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1986-ம் ஆண்டு வெறும் சில ஆயிரங்களில் ஒரு புல்லட் பைக்கை வாங்கி விடலாம் என்பதை பார்த்த நெட்டிசன்கள், அந்த காலத்துக்கே நாம போயிடலாம் போலயே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்றைய ஒரு ஸ்மார்ட்போன் விலையை விட குறைவான விலையில் அன்று விற்கப்பட்ட புல்லட் 350-ன் அந்த வைரல் பில்லில் அப்படி என்னதான் இருக்கிறது? அன்றைய விலைக்கும் இன்றைய விலைக்கும் உள்ள மலைக்க வைக்கும் வித்தியாசம் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
இன்று நீங்கள் ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், அதன் குறைந்தபட்ச விலை சுமார் 2.20 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் சரியாக 39 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் இந்த கனவு வாகனத்தின் விலை, உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு இன்றைய ஸ்மார்ட்போன்களின் விலையை விட குறைவாக இருந்துள்ளது.
கடந்த 1986ம் ஆண்டை சேர்ந்த புல்லட் பைக்கின் பில் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், பைக் பிரியர்கள் என்ன சொல்வது என தெரியாமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள சந்தீப் ஆட்டோ என்ற டீலர்ஷிப் வழங்கிய அந்த பில்லின் படி, அந்த பைக்கின் அன்றைய ஆன் ரோடு விலை வெறும் 18,700 ரூபாய் மட்டுமே. இது இன்றைய விலையுடன் ஒப்பிடும்போது 12 மடங்கு குறைவான விலையாகும்.
காலப்போக்கில் புல்லட்டின் விலையும், அதன் அஸ்தஸ்தும் எப்படி மாறியிருக்கிறது என்பதை நினைத்தால் பெரும் வியப்பாகவும் இருக்கிறது. அதேசமயம் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு சிறந்த உதாரணமாகவும் பார்க்கப்படுகிறது. அன்று 18,700 ரூபாய்க்கு வாங்கிய புல்லட்டுக்கு, இன்று ஒரு டயர் வாங்க வேண்டுமெனில் கூட ஆயிரக் கணக்கில் செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும் அன்றைய காலத்தில் புல்லட்டுகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கிய அம்சம் என்பதை தாண்டி, குடும்ப கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்டிருந்த பழைய பதிவொன்றில் (royalenfield_4567k என்ற) இந்த பழைய காலத்து பில்லானது, உண்மையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி 23, 1986 என்ற தேதியிட்ட அந்த பில்லில், கொடுக்கப்பட்டுள்ள உதிரி பாகங்கள் வாங்கினாலே, இன்றைய காலத்தில் அந்த விலையை தாண்டி விடும். என்ன மக்களே பணவீக்கத்தின் மதிப்பை இதிலிருந்து புரிந்து கொண்டீர்களா? ஆக அதற்கேற்ப உங்கள் முதலீட்டையும் திட்டமிடல் அவசியம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications