ராயல் என்ஃபீல்டு இந்தியாவின் இரு சக்கர நிறுவனங்களின் ராஜா எனச் செல்லமாக அழைக்கப்படும் மிகப்பெரிய நிறுவனம். இரு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ராயல் என்ஃபீல்டு வாகனங்களுக்குத் தனி இடம் உண்டு. 1955ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்தாலும், கடந்த 10 வருடத்தில் தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக உச்சத்தை அடைந்து, இந்திய சந்தையில் முக்கியமான நிறுவனமாக உருவெடுத்து.
ஆனால் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறுவதைப் பார்த்தால் மீண்டும் சரிவு பாதைக்குச் சென்றுவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் முதல் முறையாக வெளியேறியது இந்திய வர்த்தகத் தலைவர் பங்கஜ் சர்மா. சில மாதங்களுக்கு முன்பு பங்கஜ் சர்மா யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வாகன அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே வெளியேறினார். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டது.
பங்கஜ் சர்மா
பங்கஜ் சர்மா வெளியேறிய அடுத்த சில வாரத்திலேயே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வினோ தசாரி வெளியேறினார். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ-வே வெளியேறியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகச் சந்தையில் பதற்றத்தை குறைக்கக் கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். இந்தப் பிரச்சனை தனிவதற்குள் அடுத்த பிரச்சனை வெடித்தது.
சித்தார்தா லால்
ஆம், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சித்தார்தா லால் அவர்களின் பணிக்காலம் மீண்டும் நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்த போது அவருக்குச் சம்பள உயர்வு அளிக்க முக்கியமான கோரிக்கை வைக்கப்பட்டது. எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்பள உயர்வுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
சித்தார்த்தா லால் சம்பளம்
இந்த நிலையில் சித்தார்த்தா லால் தனது நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ பதவியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் கடைசியில் சம்பள அளவீட்டில் சில மாற்றங்கள் செய்த பின்னர் மீண்டும் சித்தார்த்தா லால் எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இந்தப் பிரச்சனை முழுமையாகத் தணிந்த வேளையில் அடுத்தடுத்து இரு முக்கிய அதிகாரிகள் வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுப்ரான்ஷு சிங்
சில நாட்களுக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார், தண்டர்பர்டு எக்ஸ், மீடியார் ஆகிய வாகனங்கள் அறிமுகம் செய்த திட்டத்திலும், அதன் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகளில் முக்கிய பங்காற்றிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் குளோபல் மார்கெட்டிங் பிரிவு தலைவரான சுப்ரான்ஷு சிங் வெளியேறுவதாக அறிவித்தார்.
லலித் மாலிக்
சுப்ரான்ஷு சிங்-ஐ தொடர்ந்து சற்றும் எதிர்பார்க்காத வரையில் சித்தார்த்தா லால்-ன் நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்கு உரிய அதிகாரியான தலைமை வர்த்தக அதிகாரியான லலித் மாலிக் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது ராயல் என்ஃபீல்டு பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், ஊழியர்கள் மட்டும் அல்லாமல் இந்த நிறுவனத்தில் பைக் வாங்கிய மக்களுக்கும் இந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிர்வாகம்
ஆனால் ராயல் என்ஃபீல்டு நிர்வாகம் சுப்ரான்ஷு சிங் மற்றும் லலித் மாலிக் ஆகிய இருவரையும் தொடர்ந்து பணியில் அமர்த்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் முன்னாள் சிஇஓ வினோ தசாரி வெளியேற்றமும், புதிய சிஇஓ-வான கோவிந்தராஜன் நியமனமும் உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
எய்ச்சர் மோட்டார்ஸ் பங்கு விலை
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் இன்று வர்த்தக முடிவில் 3.25 சதவீதம் சரிந்து 2,804.25 ரூபாயை அடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு பங்கு விலை 2,756.65 ரூபாய் வரையில் சரிந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications