தெருவில் புடு புடு எனப் பைக் சத்தம் கேட்டுவிட்டால் போதும், வீட்டில் எங்கு இருந்தாலும், எந்த வேலை செய்து வந்தாலும் ஓடி வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட்-ஐ பார்க்கும் அனுபவம் வார்த்தைகளால் கட்டாயம் விவரிக்க முடியாது.
இத்தகைய அனுபவம் 90ஸ் கிட்ஸ் பெரும்பாலானோர் இருக்கும். இதனாலேயே 80களில் வந்த பழைய புல்லட் வாகனங்களுக்கு தற்போது அதிகப்படியான டிமாண்ட் இருக்கிறது, இதே தேடி தேடி வாங்குறது பூரா பயலும் நம்ம 90ஸ் கிட்ஸ் தான்.

ராயல் என்ஃபீல்டு ஒரு எமோஷன், ராயல் என்ஃபீல்டு பைக் இல்லை புல்லட், இப்படி இதன் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம். உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையில் ப்ரீமியம் மோட்டர் சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு ஆதிக்கத்தை யாரும் அசைக்க முடியாது என்ற நிலையில் 2022 வரையில் இருந்தது.
இதற்கு ஏற்றார் போல் ராயல் என்ஃபீல்டு தனது பழைய மாடல் புல்லட்களை மட்டுமே அறிமுகம் செய்யாமல் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு கான்டினென்டல் ஜிடி, இன்டர்செப்டார் 650, ஹிமாலயன், மீடியர் எனப் பல வானங்களை ரீமாடல் செய்து அறிமுகம் செய்தது.
இப்படி ராயல் என்ஃபீல்டு இடத்தை யாராலும் தொட முடியாது என்ற நிலையில் இருந்த போது, கடந்த ஆண்டுப் பிரிட்டன் நாட்டின் Triumph, அமெரிக்காவின் Harley-Davidson தலை தூக்கத் துவங்கியுள்ளது. இவர்களும் இந்திய சந்தைக்கு ஏற்றவாறு குறைந்த விலை மாடல்களை அறிமுகம் செய்வதால் மக்கள் புதிய பிராண்டுகளைப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் எப்படிப் பாரம்பரியமாக ராயல் என்ஃபீல்டு இருக்கிறதோ, அதேபோல் அமெரிக்காவில் ஹார்லி டேவிட்சன். 2020ல் ஹார்லி டேவிட்சன் பிராண்ட் இந்தியாவில் விற்பனை சரிவு, அதிகப்படியான வரி, அதன் வாகனங்கள் இந்திய சாலைக்கும், பருவநிலைக்கும் ஏற்றதாக இல்லை என மொத்தமாக நாட்டை விட்டு வெளியேறியது.
ஆனால் ஹார்லி டேவிட்சன்-க்கு இந்தியா போன்ற மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையைக் கைவிட மனசு இல்லை, இதனால் ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்து மலிவு விலை மாடல் அதாவது 239,500 ரூபாய் விலையில் X440 என்ற பைர் அறிமுகம் செய்தது.
ஹார்லி டேவிட்சன் அமெரிக்காவில் Nightster என்ற பெயரில் விற்கும் மலிவு விலை பைக்-ன் விலை 12 லட்சம் ரூபாய், அப்படிப் பார்க்கும் போது ஹார்லி டேவிட்சன் பிராண்டில் அறிமுகமான முதல் மலிவு விலை பைக் ஆக X440 வந்தது. ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டுச் சுமார் 25000 புக்கிங் பெற்றுள்ளது X440.
இதேபோல் பிரிட்டன் நாட்டின் Triumph இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ உடன் இணைந்து தனது வாகனத்தை உள்நாட்டிலேயே தயாரித்துத் தற்போது Scrambler 400X பைக்-ஐ 262,996 ரூபாயக்கும், Speed 400 பைக்-ஐ 233,000 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது, இதற்கு 10000 ஆர்டர்கள் குவிந்து, டெலிவரியும் துவங்கியுள்ளது.
இந்தியாவில் ப்ரிமீயம் வாகன பிரிவில் ராயல் என்ஃபீல்டு பைக்களுக்கு இணையான விலையில் பிரிட்டன் நாட்டின் Triumph, அமெரிக்காவின் Harley-Davidson உள்நாட்டு நிறுவன கூட்டணியில் வாகனங்களைத் தயாரித்து வெளியிடும் காரணத்தால் இந்திய மக்களின் விருப்பமும் மாறி வருகிறது.
இளம் தலைமுறையினர் மட்டும் அல்லாமல் நீண்ட தூரம் பைக் பயணம் மேற்கொள்ள ஆசைப்படும் 40+ ஆட்களும் தற்போது ராயல் என்ஃபீல்டு பைக்களை விடுத்து Triumph, Harley-Davidson வாகனங்களைத் தேர்வு செய்யத் துவங்கியுள்ளனர். ஆனாலும் இந்த நவம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு 75,140 பைக்குகளை விற்றுள்ளது.
டிரையம்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் பிராண்டுகளின் தாக்கத்தைக் குறைக்க ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் ஹிமாலயன் 450 வாகனத்தைக் களமிறக்கியுள்ளது. இதனால் விட்ட இடத்தை எளிதாக ராயல் என்ஃபீல்ட் பிடித்தாலும் நீண்ட கால அடிப்படையில் பாதிப்பு இருக்கும் காரணத்தால் எப்போதும் உஷாராக இருக்க வேண்டிய நிலை ராயல் என்ஃபீல்டு-க்கு உள்ளது.
More From GoodReturns

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications