இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து சீனாவில் இருந்து வரக்கூடிய அரிய தாது மூலம் செய்யப்பட்ட காந்தம் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளதால் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்படும் என புலம்பி வரும் வேளையில், ஈவி துறையில் இன்னும் முழுமையாக உற்பத்தியை துவங்காத ராயல் என்பீல்ட் மே மாத விற்பனையை அளவுகளை வெளியிட்டுள்ளது.
இந்திய இளைஞர்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டவருக்கும் தற்போது மிகவும் பிடித்த பிராண்டாக மாறியிருக்கும் ராயல் என்பீல்ட் ப்ரீமியம் இரு சக்கர வாகன பிரிவில் மிகப்பெரிய ஆதிக்கத்தை கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த 5 வருடத்தில் அறிமுகம் செய்த அனைத்து மாடல்களும் இந்திய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ராயல் என்ஃபீல்டு மே 2025-ல் மொத்த விற்பனையில் 26% வளர்ச்சியைப் பதிவு செய்து, 89,429 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்கப்பட்ட 71,010 பைக்குகளை விட குறிப்பிடத்தக்க உயர்வு என்பதால் எய்ச்சர் மோட்டார்ஸ் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலையான வளர்ச்சியால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ராயல் என்ஃபீல்டு-ன் தாய் நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் 0.24 சதவீதம் உயர்வுடன் 5352.05 ரூபாயாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியா 5398.70 ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வு என்பது 5907.85 ரூபாயார உள்ளது.
மே 2025-ல், ராயல் என்ஃபீல்டு உள்நாட்டு சந்தையில் 75,820 பைக்குகளை விற்பனை செய்தது, இது முந்தைய ஆண்டு மே மாதத்தில் விற்கப்பட்ட 63,531 பைக்குகளை விட 19% அதிகம். இந்த வளர்ச்சி, இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கிளாசிக் 350, ஹண்டர் 350 போன்ற மாடல்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளன.
இதை தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் ராயல் என்ஃபீல்டு 82% வளர்ச்சியுடன் 13,609 பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது, இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 7,479 பைக்குகளாக இருந்தது.
தாய்லாந்து, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளில் ராயல் என்பீல்ட் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்தில் புதிய உற்பத்தி அலகுகளைத் தொடங்கியது, ஏற்றுமதி வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. இந்த 2 ஆலைகளிலும் உதிரி பாகங்களை வைத்து வாகனங்களை தயாரிக்கும் CKD அசம்பிளி ஆலையாக இயங்கி வருகிறது.
ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி பி. கோவிந்தராஜன் கூறுகையில், "இந்த மாதம், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலையான வளர்ச்சியுடன் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளோம். எங்கள் தயாரிப்பு வரிசையில் உள்ள கிளாசிக் 350, கெரில்லா 450, ஸ்க்ராம் 440 போன்ற புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன." இந்த வளர்ச்சி, நிறுவனத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான 10 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற இலக்கை எட்டுவதற்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ராயல் என்ஃபீல்டு, 2024-25 நிதியாண்டில் கோவான் கிளாசிக் 350, கெரில்லா 450, ஸ்க்ராம் 440, பியர் 650, கிளாசிக் 650 ஆகிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. மேலும், எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்காக 'ஃபிளையிங் ஃபிளீ' என்ற எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 2026-ல் விற்பனைக்கு வரவுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications