இந்தியாவில் என்னதான் பிற நிறுவனங்கள் தொடர்ந்து புதுப்புது பைக்குகளை அறிமுகப்படுத்தினாலும்.. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட்களுக்கு தனி இடம் உண்டு. ஏனெனில் இந்நிறுவனம் தொடர்ந்து தனது தயாரிப்புகளுக்கு புதிய விஷயங்களை உட்படுத்தி இளைஞர்களைக் கவரும் வண்ணம் புல்லட்களைத் தயாரித்து வருகிறது. இது அதிக அளவிலான வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இந்த செப்டம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட்களின் விற்பனை அமோகமாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட் செப்டம்பர் மாதத்தில் அதன் மொத்த விற்பனை கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் 86,978 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 78,580 வாகனங்கள் என்ற எண்ணிக்கையில் இருந்தது. உள்நாட்டு சந்தையில், கடந்த ஆண்டு 74,261 வாகனங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு விற்பனை கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்த 79,326 வாகனங்களாக உள்ளது என்று ராயல் என்ஃபீல்டு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி: இந்தியாவில் மட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் பிற நாடுகளுக்கும் எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட்களுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 4,319 ஆக இருந்த ராயல் என்ஃபீல்ட் ஏற்றுமதி, கடந்த மாதம் 7,652-ஆக அதிகரித்துள்ளது. "எங்கள் சமீபத்திய மாடல்களின் அறிமுகங்கள் காரணமாக செப்டம்பர் மாதத்தில் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம். 2024-ஆம் ஆண்டில் கிளாசிக் 350 பிரபலமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று ராயல் என்ஃபீல்டு CEO பி.கோவிந்தராஜன் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் ராயல் என்ஃபீல்டு விற்பனை மிகவும் குறைந்து இருந்தது. அதன்படி 66,117 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இது 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைவு. அதேபோல ஏற்றுமதியும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் குறைவாகவே இருந்தது.
எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பிற மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களின் போட்டி ஆகியவை என்ஃபீல்டின் விற்பனையை குறைத்தது. அதன் பிறகு பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்களை உற்பத்தி செய்து தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறது ராயல் என்ஃபீல்டின் புல்லட்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications