ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஜூன் மாத விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 77,109 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்த விற்பனை 5 சதவீதம் குறைந்து 73,141 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விற்பனை பாதிப்பு: உள்நாட்டு சந்தையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 67,495 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாத விற்பனை 2 சதவீதம் குறைந்து 66,117 யூனிட்களாகவே இருந்தது.

ஏற்றுமதி விற்பனை சரிவு: ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 9,614 இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 27 சதவீதம் குறைந்து 7,024 யூனிட்களாகவே இருந்தது.
இந்த விற்பனை சரிவு குறித்து கருத்து தெரிவித்த ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரி திரு. பி. கோவிந்தராஜன், எங்கள் நீண்ட காலத் திட்டங்கள் மீது நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் அவற்றை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறோம். இந்த ஆண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மிகவும் உற்சாகமூட்டும் ஆண்டாக இருக்கும், ஏனெனில் எங்கள் தயாரிப்பு பட்டியலை கணிசமாக வலுப்படுத்தும் பல புதிய தயாரிப்புக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்த ராயல் என்ஃபீல்டு விற்பனை சரிவுக்கு பின்னால் உள்ள சரியான காரணங்கள் இன்னும் தெளிவாக நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பல்வேறு காரணங்களின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களின் போட்டி ஆகியவை உள்நாட்டு விற்பனையை பாதித்திருக்கலாம். ஏற்றுமதி விற்பனையில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு, வெளிநாட்டு சந்தைகளின் நாணய மதிப்பு மாற்றங்கள் மற்றும் நுகர்வோர் விருப்பங்களின் மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டுகிறது.
இந்த விற்பனை சரிவு காரணமாக விற்பனையை அதிகரிக்கும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இனிவரும் நாட்களில் அதன் விலையை குறைக்குமா? அல்லது இன்னும் சில தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications