தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறை, உற்பத்தி மட்டும் அல்லாமல் மாநில ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகித்துப் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு இல்லாமல் இருக்குமா என்ன..?
முதலீட்டாளர்கள் கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் கூட ஆட்டோமொபைல் சார்பாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் ஓலாவின் கிருஷ்ணகிரி தொழிற்சாலையின் வெற்றியில் தமிழ்நாடு அரசின் பங்கீடு குறித்தும், அவருடைய மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் பெருமையாகக் கூறினார். இவருடைய பேச்சு பலரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த பைக் பிராண்டான ராயல் என்ஃபீல்டு இங்கிலாந்து பிரண்டாக இருந்தாலும், 1900 முதல் சென்னையில் உற்பத்தி தளத்தை வைத்து உற்பத்தி செய்து வரும் காரணத்தால் இன்றும் பலர் இதை இந்திய பிரண்டாகவே பார்க்கின்றனர்.
எய்ச்சர் மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ராயல் என்ஃபீல்டு ஏற்கனவே 1,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து தனது முதல் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைத் தொடர்ந்து Citroen மற்றும் Chrysler குழும நிறுவனமான Stellantis Group திருவள்ளூர் மாவட்டத்தில் ICE அதாவது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்திக்காகக் கூடுதலாக 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
Stellantis Group கீழ் இரு முக்கியப் பிரிவுகள் உள்ளது. இதில் முதலாவது PSA குரூப் - இதன் கீழ் Peugeot, Citroen, டிஎஸ் ஆட்டோமொபைல், ஒபல், Vauxhall ஆகியவை உள்ளது. இரண்டாவது பிரிவின் பெயர் FCA இதன் கீழ் FIAT, Lancia, Abarth, Alfa Romeo, Maserati, Chrysler, RAM, JEEP, DODGE ஆகியவை உள்ளது. இத்தனை முக்கியமான கார் பிராண்டுகளும் Stellantis Group கீழ் உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஆட்டோமோட்டிவ் நிறுவனமான ஆனந்த் குழுமம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 987 கோடி மதிப்பிலான முதலீட்டில் வாகன மற்றும் EV உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 1340 வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும்.
ஹிந்துஜா குழுமம் அசோக் லேலான்ட், சென்னை மற்றும் ஓசூரில் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய 1,200 கோடி ரூபாய் முதலீடு ஒப்பந்தம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications