இந்திய ரயில்வேயில் 30 ஆயிரத்துக்கு அதிகமான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது.
குரூப் டி பிரிவில் இந்திய ரயில்வேயில் 32,428 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு, அதனை அடுத்து உடல் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.
விரிவான தகவல்களை https://www.rrbapply.gov.in/ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் டி பிரிவில் Pointsman B (Traffic), Assistant (Track Machine) (Engineering), Assistant (Bridge) (Engineering), Assistant (Workshop) (Mechanical) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
SCVT அல்லது NCVT வழங்கிய National Apprenticeship Certificate (NAC) வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினை சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 36 வயது வரையிலும், ஓபிசி பிரிவில் நான் கிரீமி லேயரை சேர்ந்தவர்கள் 39 வயது வரையிலும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 41 வயது வரையிலும் விண்ணப்பம் செய்ய முடியும்.

கணினி அடிப்படையில் முதல் நிலை தேர்வு நடைபெற நடைபெற இருக்கிறது. ஆன்லைன் வாயிலாக 90 நிமிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்டிவ் டைப் முறையில் கேட்கப்படக்கூடிய இந்த கேள்விகளுக்கு சரியான விடைக்கு 1 மார்க்கும் தவறான விடைக்கு -1/ 3 மார்க்கும் வழங்கப்படும்.
பொது அறிவியல் பிரிவில் 25 கேள்விகள், கணித பிரிவில் 25 கேள்விகள் , இன்டெலிஜென்ஸ் அண்ட் ரீஸனிங் பிரிவில் 30 கேள்விகள் , நடப்பு நிகழ்வுகள் பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும்.
இதனை அடுத்து உடல் தகுதி தேர்வு நடைபெறும் அதில் ஆண்கள் 35 கிலோவை சுமந்து கொண்டு 2 நிமிடங்களில் 100 மீட்டர் தொலைவை கடக்க வேண்டும். அதேபோல 4 நிமிடங்கள் 15 நொடிகளில் 1000 மீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும்.
பெண்கள் என வரும்போது 20 கிலோ எடையை சுமந்து கொண்டு 2 நிமிடங்களில் 100 மீட்டர் தொலைவை கடக்க வேண்டும்,5 நிமிடங்கள் 40 நொடிகளில் 1000 மீட்டர் தொலைவை ஓடிக் கடக்க வேண்டும். இவற்றில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இறுதியாக பணிவாய்ப்பு வழங்கப்படும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications