டெல்லி: உலகளாவிய நிதித் சந்தைகளில் நடப்பு ஆண்டில் மிகவும் கொந்தளிப்பான ஆண்டுகளில் ஒன்றாக இருந்தது. நடப்பு ஆண்டில் மட்டும் உலகளாவிய பங்கு சந்தைகளில் 14 ட்ரில்லியன் டாலர் சரிவினைக் கண்டது. இதன் மூலம் இரண்டாவது மோசமான ஆண்டினை நோக்கி செல்கின்றன.
இந்திய மதிப்பில் முதலீட்டாளர்களின் முதலீடானது 1,15,79,47,00,00,00,000 ரூபாய் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
கொரோனாவுக்கு பின்னதாக மோசமான சரிவினைக் பங்கு சந்தைகள் கண்டன. எனினும் அதன் மீளத் தொடங்கிய சந்தையானது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு மேற்கொண்டு சரிவினைக் கண்டது. இது தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொடத் தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
பத்திர சந்தைகள் சரிவு
ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, நெருக்கடியான காலகட்டங்களில் அமெரிக்க கருவூல பத்திரங்கள் மற்றும் ஜெர்மன் பத்திரங்கள் முறையே 16% மற்றும் 24% குறைந்துள்ளன. இதே பிட்காயின் மதிப்பானது 60% குறைந்துள்ளது. கிரிப்டோ சந்தையும் எஃப்டிஎக்ஸ் சரிவின் பிறகு, மொத்தம் நிதித்துறையில் 1.4 ட்ரில்லியன் டாலர் சரிவினைக் கண்டுள்ளது.
இந்திய சந்தை
பல்வேறு தலைவலிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தலைவலி நிலவி வருகின்றது. உலகளாவிய அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையானது வலுவான வளர்ச்சியினை சுட்டிக் காட்டியது. உலக வங்கி சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், பிற வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய சந்தையானது வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு
இந்திய சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது அதிகரித்துள்ளது. இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது வளர்ச்சியினை ஊக்குவித்து வருகின்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசானது நாட்டின் உற்பத்தி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
சென்செக்ஸ் & நிஃப்டி நிலவரம்
இதற்கிடையில் சர்வதேச சந்தைகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது வலுவான உச்சத்தினை எட்டியுள்ளது. குறிப்பாக நிஃப்டி 18,800 என்ற லெவலையும் எட்டியுள்ளது. எனினும் இது தற்போது 18,100 என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே சென்செக்ஸ் 60,800 என்ற லெவலில் காணப்படுகின்றது. சென்செக்ஸின் வரலாற்று உச்சம் 63,583.07 புள்ளிகளை எட்டியது.
இன்றைய நிலவரம் என்ன?
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 241.02 புள்ளிகள் குறைந்து, 60,826.22 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 71.75 புள்ளிகள் குறைந்து, 18,127.35 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இனி எப்படி இருக்கும்?
நடப்பு ஆண்டில் சற்றே மேம்படத் தொடங்கியுள்ள இந்திய சந்தையானது, அடுத்த ஆண்டிலும் இந்த போக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்திய சந்தைகளில் முதலீடுகள் அதிகரிக்கலாம். சந்தையில் ஏற்றமும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரியான வாய்ப்பு
எனினும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலைக்கு மத்தியில் இன்னும் பங்கு சந்தைகள் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சர்வதேச சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது சர்வதேச சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது இந்திய சந்தைக்கு சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications