பெங்களூருவைச் சேர்ந்த ஒரு டெக்கி, கூகுள் நிறுவனத்திடமிருந்து ரூ. 1.64 கோடி மதிப்புள்ள வேலை வாய்ப்பைப் பெற்றதையடுத்து சூடான ஆன்லைன் விவாதத்தை கிளப்பியுள்ளார். இது பலருக்கு ஒரு கனவு சம்பளமாகத் தோன்றினாலும், நெட்டிசன்கள் சிலர் 10 ஆண்டுகள் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் உள்ள ஒருவருக்கு சம்பளம் குறைவாக உள்ளதாக கூறியுள்ளனர்.
ஜேபி மோர்கனின் டெவலப்பரான கார்த்திக் ஜோலபாரா தனக்கு கூகுள் நிறுவனத்திடம் இருந்து வந்த ஆஃபரை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து X தளத்தில் பகிர்ந்தார். அதில் அவருடைய பணி அனுபவம் குறித்த தகவல்கள் இருந்தன. இவர் டயர் 3 கல்லூரியில் படித்துள்ளார், "கிரேசி ஆஃபர்கள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த போஸ்ட் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

கூகுள் வழங்கிய சலுகை: பகிரப்பட்ட விவரங்களின்படி அந்த நபருக்கு கூகுளில் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் ரோல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத் தொகுப்பில் ஆண்டுக்கு ரூ.65 லட்சம் அடிப்படை சம்பளம், பல லாபகரமான சலுகைகளாக ரூ.9 லட்சம் வருடாந்திர போனஸ், ரூ.19 லட்சம் சைனிங் போனஸ் மற்றும் ரூ.5 லட்சம் ரீலொகேஷன் போனஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த பலன்கள் மொத்தமாக சேர்த்து ரூ.1.64 கோடி. 10 வருட அனுபவதினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? கிரேசி ஆபர்கள் என்று ஜோலபாரா தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பாரம்பரிய கணினி அறிவியல் பின்னணி இல்லாத ஒருவருக்கு இதுபோன்ற சலுகையின் முக்கியத்துவம் என்ன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
கணினி சார்ந்த படிப்பு அல்லாமல் டயர் 3 கல்லூரியில் படித்த ஒருவருக்கு இத்தகைய ஆஃபர் கிடைத்தது குறித்து பலரும் தங்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் CS பட்டம் இல்லாத டயர் 3 கல்லூரி பட்டதாரி சீனியர் சாப்ட்வேர் ரோலில் பணிபுரிய போகிறாரா? இது பாராட்டுக்குரியது என்று கூறி இருந்தார்.

இன்னொரு எக்ஸ் பயனர், இதே போல அனுபவம் உள்ள நபர்கள் அதிகம் சம்பாதிப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். சில பயனர்கள் குறிப்பாக கூகுள் போன்ற முக்கிய நிறுவனத்திற்கு இந்த சலுகை குறைவாக இருப்பதாக கருதியும் கமெண்ட் செய்திருந்தனர். 10 வருட அனுபவத்திற்கு நான் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன் என்று ஒரு நபர் கமெண்ட் செய்திருந்தார்.
CS பட்டம் பெறாமல் வேறு பிரிவில் இன்ஜினியரிங் முடித்த ஒரு நபர் கூகுள் நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் ரோலில் தகுதி பெற்று இருப்பது CS பிரிவில் இன்ஜினியரிங் முடித்து பிற பிரிவுகளில் பணியில் இருக்கும் நபர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக நாம் செய்யும் தொழிலில் பெரிய இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு இவருடைய கதை சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications