பெங்களூரு: இந்தியாவின் டெக் நகரமான பெங்களூருவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கே ஐடி துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுக்கு பல லட்சங்களில் சம்பளம் கிடைக்கிறது. அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஐடி நிபுணர், தான் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் வருமானம் ஈட்டினாலும் தனக்கு அந்த தொகை போதவில்லை என கூறியுள்ளார்.
ஆஸ் வோரா ஜெயின் என்பவர் லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என்னுடைய சம்பளம் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் வரி அனைத்தும் செலுத்திய பிறகு என் கைக்கு வரக்கூடிய தொகை ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் அதாவது ஒரு மாதத்திற்கு 8 . 3 லட்சம் ரூபாய்" என கூறியுள்ளார். "என்னுடைய சம்பளத்தில் மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாயை வீட்டு வாடகையாக செலுத்துகிறேன். இந்திரா நகர் பகுதியில் 3 படுக்கை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தான் வாங்கி இருக்கும் ஆடம்பர காருக்காக மாதம் 80 ஆயிரம் ரூபாயை இவர் ஈஎம்ஐ செலுத்துகிறார் . ஸ்விக்கி , ஸோமேட்டோ செயலிகள் வாயிலாக உணவு ஆர்டர் செய்வதற்கு மாதந்தோறும் 70 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறாராம். அது தவிர ஹோட்டல் உள்ளிட்டவற்றுக்கு சென்று உணவருந்த ஒரு மாதத்திற்கு 1.2 லட்சம் ரூபாயை செலவிடுகிறாராம்.
சாதாரணமான ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட் கூட 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் பிரீமியம் ரக ஆர்கானிக் வைன் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தவிர ஜிம்முக்காக தான் செலுத்தக்கூடிய சந்தா தொகை மற்றும் பிற செலவினங்கள் என ஒரு மாதத்திற்கு இவர் 8.87 லட்சம் ரூபாயை செலவு செய்கிறாராம். அதாவது தன்னுடைய சம்பளத்தை விட கூடுதலாக 57 ஆயிரம் ரூபாயை செலவு செய்வதாக இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு மாதத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் என்பது பலரது கனவு சம்பளம் அப்படி கிடைத்தும் என்னால் இந்த நகரத்தில் அந்த பணத்தை மிச்சப்படுத்த முடியவில்லை இந்த நகரத்திற்கு என்னதான் பிரச்சனை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயினின் இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பலரும் உங்களுடைய ஆடம்பரமான வாழ்க்கை முறை தான் இதற்கு காரணம் என அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த நகரம் உங்களை இவ்வளவு செலவு செய்யுங்கள் என கேட்கவில்லை, அது நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை , பெங்களூருவில் மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் பலரை நான் பார்த்திருக்கிறேன் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications