ரூ.1 லட்சத்தை ரூ.36 லட்சமாக மாற்றிய மியூச்சுவல் ஃபண்டு.. முதலீட்டாளர்கள் காட்டில் மழை!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பொருத்தவரையில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது செல்வத்தை அதிகரிக்க உதவும். எந்த ஒரு முதலீடாக இருந்தாலும், அதற்கு கூட்டு வட்டி கிடைத்தால் முதலீடு செய்யும் போது இருந்ததைவிட உங்களுடைய பணம் வேகமாக வளரும். முதல் சில ஆண்டுகளில் உருவாகும் வருமானம், மீண்டும் அசலுடன் சேர்க்கப்பட்ட அதற்கும் மீண்டும் வட்டி கிடைக்கும். இதே சுழற்சி முறை தொடர்வதால் கூட்டுவட்டி முறையில் வழங்கப்படும் வருமானத்திற்கு பிற திட்டங்களை விட மதிப்பு அதிகம். அப்படித்தான் ஒரு ஃபண்டு கடந்த 10 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு தாராளமான வருமானத்தை வழங்கியுள்ளது. அது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஐசிஐசிஐ ப்ருடன்ஷியல் ஈகிவிட்டி ஃபண்டு 1999-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஃபண்டில் யாராவது ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 1 வருட காலத்தில், அது ரூ. 1.12 லட்சமாக வளர்ந்திருக்கும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது ரூ. 1.60 லட்சமாக உயர்ந்திருக்கும்.

ரூ.1 லட்சத்தை ரூ.36 லட்சமாக மாற்றிய மியூச்சுவல் ஃபண்டு.. முதலீட்டாளர்கள் காட்டில் மழை!

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ. 2.60 லட்சம் வருமானம் கிடைத்திருக்கும். அதே போல கடந்து 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீடு ரூ. 3.66 லட்சமாக அதிகரித்திருக்கும். இந்த ஃபண்டு தொடங்கப்பட்ட நேரத்தில் யாராவது ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் அதே ரூ.1 லட்சம் முதலீடு தற்போது ரூ. 36.14 லட்சமாக மாறி இருக்கும்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முதலீடு செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே வருமானம் வழங்கிய ஒரு ஃபண்டு எதிர்காலத்திலும் அதே போல வருமானம் வழங்கும் என்று சொல்லிவிட முடியாது. அது அந்தந்த ஃபண்டின் செயல்திறனை பொறுத்தது. ஒரு வேளை எதிர்காலத்திலும் இதே போல வேகத்தில் தொடர்ந்து செயல்படலாம். அப்படி இல்லை எனும் பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

2025-ஆம் ஆண்டின் ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி இந்த ஃபண்டில் ரூ. 39,886 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதன் போர்ட்ஃபோலியோவில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், மாருதி சுசுகி இந்தியா, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஐஷர் மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, அம்புஜா சிமென்ட் போன்றவை அடங்கும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+