உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு வீரர் லயோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் . உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு வீரர்.
எந்த நாட்டிற்கு சென்றாலும் மெஸ்ஸியை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விடுவார்கள். ஒரு முறையாவது அவரை நேரில் பார்க்க வேண்டும் என அனைவரும் காத்திருப்பார்கள். தற்போது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வரும் 13ஆம் தேதி மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்த பயணத்தில் மெஸ்ஸியை பார்ப்பது மட்டுமல்ல அவருடன் செல்ஃபியும் எடுக்க கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸியுடன் அர்ஜெண்டினா வீரர் ரோட்ரிகோ டி பால் மற்றும் உருகுவேயின் லூயிஸ் சாரஸ் ஆகியோரும் வருகை தர உள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை மும்பை வருகை தருகிறார் மெஸ்ஸி. இதனை அடுத்து சனிக்கிழமை மாலை அவர் ஹைதராபாத்திற்கு வர உள்ளார். அங்கே மெஸ்ஸி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதனை அடுத்து உப்பால் ஸ்டேடியத்தில் 3 மணி நேரம் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ஹைதராபாத்திற்கு வருகை தரும் மெஸ்ஸி 7 மணி அளவில் உப்பால் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.
ஹைதராபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஐதராபாத் வருகை தரும் மெஸ்ஸி உடன் ரசிகர்கள் புகைப்படமும் எடுத்து கொள்ளலாம். ஹைதராபாத்தின் ஃபலக்குனா மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மெஸ்ஸியுடன் படம் எடுத்து கொள்ளலாம்.
மெஸ்ஸி உடன் படம் எடுக்க நினைக்கும் ரசிகர்கள் அதற்காக டிஸ்டிரிக்ட் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கென கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு செல்ஃபிக்கு 10 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளனர்.
எனவே மெஸ்ஸியுடன் செஃல்பி எடுக்க விரும்பும் ரசிகர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 13ஆம் தேதி காலை கொல்கத்தாவில் மெஸ்ஸி தன்னுடைய ஆளுயர சிலையை திறந்து வைக்க உள்ளார். இதனை அடுத்து ஐதராபாத் வரும் அவர் பின்னர் அங்கே இருந்ய்து மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர் 15ஆம் தேதி டெல்லிக்கு வருகை தருகிறார்.டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியில் மெஸ்ஸி பிரதமர் நரேந்திர மோடியை அவருடைய இல்லத்தில் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications