ஒவ்வொருவருக்கும் தங்களுக்கென தனிப்பட்ட நிதி இலக்குகள் இருக்கும். குழந்தையின் கல்வி, திருமணம், ஓய்வூதியத் திட்டம், சொந்த வீடு வாங்குவது என உங்களுடைய நிதி இலக்குகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டாயம் செய்யப்பட வேண்டியவை. இவற்றை அடைய கண்டிப்பாக நீண்ட கால திட்டமிடல் முக்கியம். ஏனெனில் நாளடைவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகிறது. கையில் கிடைக்கும் பணம் குடும்பச் செலவுக்கே போதவில்லை. அப்படி இருக்கையில் பெரிய இலக்குகளை அடைய முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.
தனிப்பட்ட இலக்குகள் என்பது ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடலாம். தற்போது ஒருவர் தனக்கென பிரத்தியேகமாக சில இலக்குகளை வைத்திருக்கிறார். அதை எப்படி அடையலாம் என்பதற்கு ஒரு நிதி ஆலோசகர் ஆலோசனையும் வழங்கியுள்ளார். அது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

"என் மனைவி மாதத்திற்கு ரூ.10 லட்சம் இருந்தால் தான் வசதியாக வாழ முடியும், குழந்தைகளுக்கு வெளிநாட்டு கல்வி போன்றவற்றை வழங்க முடியும் என்று நம்புகிறார். நான் என்னுடைய முழு நேர வேலையோடு சேர்த்து மாதம் 30,000 முதல் 40,000 வரை கூடுதலாகவும் சம்பாதித்து வருகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக தான் முறையாக சம்பாதிக்கத் தொடங்கியுள்ளேன். எனது சேமிப்போம் குறைவாகத்தான் இருக்கிறது.
தற்போது நான் சில திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.10 லட்சம், பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம், என்பிஎஸ் திட்டத்தில் ரூ.80,000, பிபிஎஃப் திட்டத்தில் ரூ.2 லட்சம்.
என்னுடைய நீண்ட கால இலக்குகள்: மூன்று ஆண்டுகளில் 1.5 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்க வேண்டும், 10 ஆண்டுகளில் ரூ.3 கோடி மதிப்புள்ள வாடகை சொத்தை வாங்க வேண்டும், 15 ஆண்டுகளில் குழந்தையின் வெளிநாட்டு கல்விக்கு ரூ.1 கோடி ஏற்பாடு செய்ய வேண்டும், 20 ஆண்டுகளில் குழந்தையின் திருமணத்திற்கு ரூ. 50 லட்சம் ஏற்பாடு செய்ய வேண்டும், 20 ஆண்டுகளில் ஒரு பிளே ஸ்கூல் தொடங்க வேண்டும், 55 வயதில் நிதி சுதந்திரம் அடைய வேண்டும். அப்போது மாத செலவுக்கு ரூ. 80,000 வரை பணம் இருக்க வேண்டும்.
என்னுடைய வருமானம் மாதம் ரூ.2 லட்சமாக இருந்தாலும் இந்த இலக்குகளை என்னால் அடைய முடியுமா? உண்மையில் இது சாத்தியமா? என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பைனான்ஸ் 1 என்ற நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் அகில் ராத்தி பதிலளித்துள்ளார்.
உங்களுடைய இலக்குகளை நீங்கள் தெளிவாக வரையறுத்திருக்கிறீர்கள். இதில் குழந்தையின் கல்வி, திருமணம், ஓய்வூதிய திட்டம், வீடு வாங்குவது போன்ற சில திட்டங்கள் முக்கியமானவை. மேலும் இவை சில காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டியவை. இதில் ஸ்கூல் தொடங்குவது மற்றும் வாடகை விடும் வகையில் சொத்து வாங்குவது போன்றவை உங்களுடைய தனிப்பட்ட ஆசையால் ஏற்பட்ட இலக்குகள். முதலில் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். அதிக மன அழுத்தம் இல்லாமல் இருக்க எந்தெந்த இலக்குகள் முதலில் அடையப்பட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அகில் ராத்தி கூறுகையில், "நீங்கள் இப்பொழுதுதான் நிலையான வருமானம் ஈட்ட தொடங்கி இருக்கிறீர்கள். இதை வைத்து நீங்கள் ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்து விட்டீர்கள் என்பது தெளிவாகிறது. ஏற்கனவே ரூ.15 முதல் ரூ.16 லட்சம் வரையில் முதலீடு செய்திருக்கிறீர்கள்.. இதுவே ஒரு நல்ல தொடக்கம்தான். இருப்பினும் அடுத்த 3 ஆண்டுகளில் வீடு வாங்குவது, வெளிநாட்டு கல்விக்கு செலவு செய்வது போன்ற சில வரவிருக்கும் இலக்குகளுக்கு நீங்கள் தொடர்ந்து சேமித்தாக வேண்டும்.
உங்கள் வருமானம் நிலையாக இருந்து.. நீங்கள் மாதா மாதம் தவறாமல் முதலீடு செய்து வந்தால் இந்த இலக்குகள் அடையக்கூடியவை தான். சேமிப்புகள் சில ஆண்டுகள் தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் உங்களுடைய பெரிய இலக்குகளை அதிகளவிலான அழுத்தம் இல்லாமல் படிப்படியாக அடைய முடியும். ஆனால் சிறந்த வேலை வாழ்க்கை சமநிலை வேண்டும் என்பதற்காக உங்களுடைய வருமானத்தை குறைக்க தொடங்கினீர்கள் என்றால் சில விஷயங்களில் மாற்றம் ஏற்படும்.
இதனால் வீட்டு செலவுகள் போக சேமிக்க இருக்கும் பணம் கணிசமாக குறையும். அந்த நேரத்தில் உங்கள் அனைத்து இலக்குகளையும் அடைவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். மன அழுத்தத்தை தரும் ஒன்றாகவும் மாறலாம். இதனால் உங்கள் மன அமைதி பாதிக்கப்படலாம். அதனால் தான் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பது முக்கியம். முதலில் முக்கியமான இலக்குகளான குழந்தை கல்வி, உங்கள் ஓய்வூதியம் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். மற்றவற்றை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.
தற்போது அதிகமாக வருமானம் ஈட்டும் கட்டத்தில் இருக்கிறீர்கள்.. இந்தக் கட்டத்தில் உங்கள் முக்கிய இலக்குகளுக்கான முதலீடுகளை தொடங்குங்கள். எஸ்ஐபி தொடங்கலாம். ஆண்டுதோறும் அதில் வருமானம் கிடைத்திருக்கிறதா? என்பதை கண்காணிக்கலாம். வாழ்க்கை படிப்படியாக நகரும் போது அதற்கு ஏற்ப சில இலக்குகளை அடையும் காலக்கெடுவையும் மாற்றியமைக்க தயாராக இருங்கள். அதற்காக நீங்கள் உங்கள் இலக்குகளை எல்லாம் கைவிட வேண்டியது இல்லை.. அவற்றை வெவ்வேறு கட்டங்களில் அடைய முயற்சி செய்யலாம். நிலையாக வருமானம் பெற்று தொடர்ந்து சேமித்து வந்தால் இந்த அனைத்து இலக்குகளும் எட்டக் கூடியதாகவே இருக்கும்" என்று பதில் அளித்துள்ளார்.
ஆக இலக்குகள் தெளிவாக இருந்து அதற்கான வேலைகளை செய்ய தொடங்கினால் எந்த ஒரு இலக்கையும் எளிதில் அடைய முடியும் என்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications