வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. விபத்து, நோய் அல்லது திடீர் மரணம் குடும்பத்தை பெரும் கடனில் தள்ளிவிடும். த்மிழ்நாட்டில் பல குடும்பங்கள் இதனால் கடுமையான நிதி சிக்கலில் சிக்குகின்றன. ஆனால் இந்த மோசமான நிலையில் இருந்து தப்பிக்க குறைந்த செலவில் எளிய வழிகளை மத்திய அரசு நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அளிக்கிறது.
சாமானிய மக்களும், குடும்பங்களும் பலன் பெற வேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பினருக்கும் மத்திய அரசு மிகக் குறைந்த செலவில் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை வழங்குகிறது. சில திட்டங்களில் ஆண்டுக்கு வெறும் 100க்கும் குறைவான கட்டணத்தில் பல லட்சம் மதிப்புடைய காப்பீட்டு ரூபாய் பாதுகாப்பை அளிக்கிறது. ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு இருந்தால் போதும், த்மிழ்நாட்டு மக்கள் இதைஇதை எளிதாக பெறலம்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) விபத்து காப்பீட்டிற்கு சிறந்தது. இதில் ஆண்டுக்கு சுமார் ரூ.20 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் வரை (மரணம் அல்லது முழு ஊனம் ஏற்பட்டால்) மற்றும் ரூ.1 லட்சம் (பகுதி ஊனத்திற்கு) காப்பீடு கிடைக்கும். 18 முதல் 70 வயதினர் இதில் சேரலாம். பிரீமியம் வங்கிக் கணக்கிலிருந்து தானாக கழிக்கப்படும், இது இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் விபத்து காப்பீடு.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ஆயுள் காப்பீட்டிற்கு ஏற்றது. ஆண்டுக்கு ரூ.330 பிரீமியத்தில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி எந்த காரணத்தினாலும் மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை குடும்பத்திற்கு கிடைக்கும். 18 முதல் 50 வயதினர் சேரலாம். பிரீமியம் தானாக கழிக்கப்படுவதால் பணம் செலுத்துவதை மறக்க முடியாது.
அடல் பென்ஷன் யோஜனா (APY) ஓய்வூதியத்திற்கு சிறந்தது. தொழிலாளர்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத துறையினருக்கு ஏற்றது. மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். தகுதியானவர்களுக்கு அரசும் பங்களிப்பு செய்கிறது. நீங்கள் பணியாற்றும் காலத்தில் இத்திட்டத்தில் முதலீடு செய்தால் ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் கிடைக்கும்.
ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) பெரிய மருத்துவ செலவுகளுக்கு உதவுகிறது. குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். 1,500க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகள் உள்ளடங்கும். ஏழை குடும்பங்கள் பெரிய மருத்துவமனை செலவுகளை பயப்படாமல் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்திற்கு எவ்விதமான ப்ரீமியமும் இல்லை, ஆனால் இத்திட்டத்தில் பலன் பெற வேண்டும் என்றால் Ayushman Card பெற வேண்டியது.
EShram கார்டு திட்டம் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு உதவுகிறது. இத்திட்டம் மூலம் விபத்து காப்பீடாக 2 லட்சமும், பென்ஷனாக மாதம் 3000 ரூபாயும் அளிக்கப்படுகிறது. 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் பிற நிதி உதவிகள், நலத் திட்டங்கள் மூலம் கிடைக்கின்றன.
இத்திட்டங்களில் சேர்வது என்பது எளியது. ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு போதும். வங்கி, தபால் அலுவலகம் அல்லது காமன் சர்வீஸ் சென்டர் (CSC) மூலம் பதிவு செய்யலாம். இத்திட்டங்கள் சாதாரண மக்களுக்கு பெரிய நிதி பாதுகாப்பை தருகின்றன. சிறிய தொகை இன்று செலுத்தினால் நாளை குடும்பம் பெரிய சுமையிலிருந்து தப்பும். இப்போதே உங்கள் அருகிலுள்ள வங்கி அல்லது CSC-யை நாடி இத்திட்டங்களில் சேருங்கள்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications