சென்னை: ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (HCC) பங்குகள் வெள்ளிக்கிழமையன்று ஒரு சிறு தேக்கத்துக்குப்பின் மீண்டும் ஏறுமுகத்தை எட்டியது.
52 வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த ஹெச்சிசி பங்குகள் விலை தலா ரூ.26.44இல் இருந்து 12.75 சதவீதம் குறைந்தது. ஆனால் சந்தை முடிவின்போது மதிப்பு மீண்டும் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.24.72க்கு இருந்தது. முந்தைய முடிவைக் காட்டிலும் இது 5.42 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஓராண்டில் ஹெச்சிசி பங்கு 100.98 சதவீதம் உயர்ந்துள்ளது. சந்தை மூலமாக்கலில் ரூ.3,740.21 கோடியை எட்டிய ஹெச்சிசியின் டர்ன்ஓவர் ரூ.61.59 கோடியாக உள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹெச்சிசி ரூ.52.73 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.278.86 கோடி நஷ்டத்தை அடைந்திருந்தது. ஹெச்சிசியின் நிகர வருவாய் கடந்த நிதியாண்டை ஒப்பிட்டால் 15.07 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஹெச்சிசி பங்கு நிலைமை குறித்து இரு நிபுணர்கள் கூறுகையில் அதன் பங்கு விலை தலா ரூ.28ஐ அடுத்த காலாண்டில் எட்டும் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில நிபுணர்களோ தற்போதைய மதிப்பான ரூ.24.20இல் தான் இருக்கும் என்று கூறினர்.
Prabhudas Lilladher சந்தை ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை துணைத்தலைவர் வைஷாலி பரேக் கூறுகையில், கடந்த சில காலாண்டுகளைப் பார்க்கையில் ஹெச்சிசி பங்கு மதிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. ரூ.24.50 என்ற அளவுக்கு வந்துள்ளது. தற்போதைய சந்தை நிலவரத்தை கணிக்கும்போது அதன் மதிப்பு ரூ.28-30க்கு உயரும் நிலைதான் உள்ளது. ரூ.23ஐ எட்டினால் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்றார்.
இதுபற்றி சந்தை நிபுணர் ரவி சிங் கூறுகையில், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் பங்கு விலை தினசரி மற்றும் வாராந்திர நிலைமைகளைப் பார்த்தால் வலுவாகத்தான் உள்ளது. அண்மைக்கால காலாண்டுகளைப் பார்த்தால் கம்பெனியின் நிதிநிலை நிதானமாகவே உள்ளது. இதனால் பங்கு விலை வரும் காலாண்டில் ரூ.28ஐ எட்டலாம் என்ரார்.
அதேவேளையில் மற்றொரு நிபுணரான கணேஷ் டோங்ரே கூறுகையில், தற்போதைய நிலைமையில் இடைத்தரகர்கள் லாபத்தை பார்க்கலாம். ஆனால் நிலைமை மாறக்கூடும் என்பதால் அதன் விலை ரூ.18-20க்கு வரலாம் என்றார்.
டிப்ஸ்2டிரேட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஏஆர் ராமச்சந்திரன் கூறுகையில், ஹெச்சிசி பங்குகள் புல்லிஷ்ஷாக இருந்தாலும் தினசரி அட்டவணையைப் பார்க்கும்போது ரூ.27.55 ஐ தொட்டுள்ளது. இந்த நிலையில் அதன் மதிப்பு ரூ.24.20க்கும் கீழே சரிந்து வரும் காலாண்டில் ரூ.18.90ஐ தொடலாம் என்றார்.


Click it and Unblock the Notifications