இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி தன்னுடைய ஆடம்பரமான டிரஸ், நகைகள், ஹேண்ட் பேக்குகள் போன்றவற்றால் மக்களின் கவனத்தை ஈர்ப்பார். அப்படித்தான் அவர் சமீபத்தில் அணிந்திருந்த உடையில் ஒரு சிறிய பின் இருந்தது. அதுதான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இதன் விலையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
ஆடம்பரப் பொருட்களின் அடையாளமாக அம்பானி குடும்பம் திகழ்கிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நிதா அம்பானி தன்னுடைய டிரஸ்ஸில் சிறிய புரூச் ஒன்றை அணிந்திருந்தார். புரூச் என்பது உடையில் குத்தும் பின். சிலர் துப்பட்டா அணியும்போது இதை பயன்படுத்துவார்கள். சிலர் தங்களுடைய கோட்டில் அணிந்திருப்பார்கள்.

தற்போது பேஷன் உலகில் நிதா அம்பானி அணிந்திருந்த புரூச் தான் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த புரூச் பொதுவாக 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். ஆனால் நிதா அம்பானி அணிந்திருந்த புரூச்சின் விலை சுமார் ரூ.15 கோடி. தட்டான் பூச்சி வடிவில் இருந்த இந்த புரூச்சை உருவாக்க 1 அல்ல , 2 அல்ல சுமார் 10 ஆண்டுகள் எடுத்ததாம். அப்படி இதில் என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி கல்ச்சுரல் சென்டரில் புதிதாக தொடங்கப்பட்ட "தி லைப்ரரி" என்ற நிகழ்வில் நிதா அம்பானி கலந்து கொண்டார். அப்போதுதான் இந்த அரிய புரூச்சை அணிந்து வந்தார். இதற்கு "சோரிங் ஸ்பிரிட்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பின்னை புகழ்பெற்ற சீன கலைஞரான வாலஸ் சான் உருவாக்கியுள்ளார். இதை முழுமையாக வடிமமைத்து முடிக்க அவருக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை எடுத்தது.
இந்தப் பின்னுக்கு ஏன் இவ்வளவு விலை?: சிறிய தட்டான் பூச்சி போல இருக்கும் இந்த புரூச் உலகில் மிக அரிதான மற்றும் விலை மதிப்புள்ள ரத்தினக் கற்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது. தட்டான் பூச்சியின் நடுப்பகுதியில் 17.67 காரட் சவோரைட் கார்னெட் என்னும் ரத்தினம் பதிக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி மஞ்சள் நிற வைரங்கள், மாணிக்கங்கள் பிங்க் நிற வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன.
சாதாரணமாக செய்யப்படும் பின்னைப் போல அல்லாமல் இது உலகிலேயே மிகவும் லேசான உலோகமான டைட்டானியத்தால் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிதா அம்பானி இதை அணிந்து கொண்டு நடக்கும் போது தட்டான் பூச்சி உண்மையிலேயே அசைவது போல தோற்றமளிக்கும். மேலும் ஒரு அழகான தட்டான் பூச்சி அவரது தோளில் அமர்ந்திருப்பது போன்ற தத்ரூபமாக இருக்கும்.
ஒரு தட்டான் பூச்சி பறக்கும் போது நேரம், வேகம் மற்றும் சுற்றுச்சூழலை தொடர்ந்து கணக்கிட்டு கொண்டே இருக்கும். அதேபோல மனிதர்களும் இயற்கையோடு இணைந்து தங்களுக்கு வரும் தடைகளை எல்லாம் தாண்டி சுதந்திரமாக முன்னேற வேண்டும் என்ற உன்னத கருத்தை சொல்லும் விதமாக இந்த புரூச் உருவாக்கப்பட்டுள்ளது. நிதா அம்பானி அதற்கு ஏற்ப உடை அணிந்து கொண்டு "தி லைப்ரரி" விழாவிற்கு வந்திருந்தார். லினன் பேண்ட் சூட் மற்றும் இடது தோள்பட்டையில் அவர் அணிந்திருந்த தட்டான் பூச்சி புரூச் ஆகியவை அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


Click it and Unblock the Notifications
