சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு பதிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மும்பை டிரை க்ளீனிங் கடை (dry cleaning shop) உரிமையாளர் செலவுகள் போக மாதம் ரூ.2 லட்சத்திற்கு மேல் லாபம் ஈட்டுவதாகக் கூறும் பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பதிவின் விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், உண்மையான லாபம் அதை விட குறைவுதான் என்றும் விவாதித்து வருகின்றனர். பலர் இதை மிகப்பெரிய பிஸ்னஸ் ஐடியா எனவும் பாராட்டி வருகின்றனர்.
நலினி உனகர் என்ற எக்ஸ் பயனர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள டிரை க்ளீனிங் கடை உரிமையாளருடன் நடந்த உரையாடலை டிவிட்டர் பதிவு வாயிலாக பகிர்ந்திருந்தார். இந்த கடையில் கடைக்காரர் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வேலை செய்கின்றனர். இரண்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்தி கடந்த 10 வருடமாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் கடையில் தினசரி 350க்கும் அதிகமாக ஆடைகள் இஸ்திரி செய்வதற்காக வருகிறதாம். ஒரு ஆடைக்கு ரூ.10 வீதம் ரூ.3,500 இதன் மூலம் கிடைக்கிறது. தினசரி அடிப்படையில் 20 ஆடம்பர அல்லது காஸ்ட்லியான ஆடைகளான சூட், சோலி, பிரீமியம் சேலைகள் வருகிறதாம். இதற்கு ஒவ்வொன்றும் ரூ.350 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளுக்கு ரூ.7,000 வரை வருமானம் கிடைக்கிறது.
கணவன் மனைவி நடத்தும் இந்த கடைக்கு மாதம் 3 நாட்கள் மட்டுமே விடுமுறை, எனவே மாதத்தில் 27 நாட்களுக்கு தினமும் ரூ.10,500 என்றால் ரூ.2,83,500 வருமானம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் நலினி.
செலவுகள் பக்கம் வந்தால், இந்த கடை அவர்களுக்கு சொந்தமானது என்பதால் வாடகை இல்லை, மாதம் மின்சாரம் கட்டணம் ரூ.6,000, இரண்டு ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.40,000 (தலா 20000 ரூபாய்) என்று குறிப்பிட்டு, எல்லாச் செலவுகளையும் கழித்த பிறகு மாத லாபம் ரூ.2.37 லட்சம் என்றும், சராசரியாக ரூ.2 லட்சத்திற்கு மேல் வருவதாகவும் அந்த கடை உரிமையாளர் கூறியதாக இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தார் நலினி.
இந்த பதிவு பலரை ஆச்சரியப்படுத்தியது, 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் சம்பளத்தை விட அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இந்த விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று இத்தொழிலில் உள்ளவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். கௌரவ் தோமர் என்ற பயனரும் தன் வீட்டுக்கு அருகிலுள்ள டிரை க்ளீனிங் கடைக்காரரிடம் பேசியதாகக் கூறி, வைரல் பதிவு முழுமையாக தவறானது என்று நலினி பதிவுக்கு பதில் அளித்து விளக்கியுள்ளார். மாதம் வருமானம் ரூ.2.83 லட்சம் என்ற எண் சரியாக இருக்கலாம் என்றாலும், செலவுகள் மிகவும் குறைவாகக் காட்டப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
உண்மையான செலவுகளில் துணிகளை வெள்ளையாக்கும் ரசாயனங்கள் (chemicals/solvents) மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும் - குறிப்பாக சேலைகள் மற்றும் நுட்பமான துணிகளில் இருக்கும் கரையை நீக்குவதற்கு உயர்தர கெமிக்கல் பயன்படுத்த வேண்டும், அதற்கான செலவுகள் அதிகம்.
தண்ணீர் செலவு (boiler மற்றும் இயந்திரங்களுக்காக) ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை, பராமரிப்பு ரூ.10,000, பிற செலவுகள் ரூ.5,000 என்று கணக்கிட்டால் கூடுதலாக ரூ.60,000 மேல் செலவாகும். இந்த செலவுகள் நலினி பதிவில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இதனால் உண்மையான நிகர லாபம் டெல்லியில் சராசரியாக மாதம் ரூ.60,000 அளவில் தான் இருக்கிறது என்று கௌரவ் தோமர் தெரிவித்துள்ளார். அதிக அளவு ஆர்டர்கள் இருந்தாலும், இந்த தொழிலில் நிகர லாப வீதம் 20-30% அளவிலேயே இருக்கும். ரசாயனங்கள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் மிக அதிகம் என்பது இத்தொழிலில் உள்ளவர்களுக்கு தெரிந்த உண்மை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நலினியின் இந்த வைரல் பதிவும் அதற்கு எதிரான கௌரவ் பதிவும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சிறு தொழில்கள் எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன, செலவுகள் எவ்வளவு உள்ளன என்பதைப் பற்றிய தெளிவும் இதில் கிடைத்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications